Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம்?

TNSTC Special Buses : மிலாது நபி, ஓணம், வார இறுதி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர் விடுமுறையையொட்டி, 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம்?
சிறப்பு பேருந்துகள்
Umabarkavi K
Umabarkavi K | Published: 04 Sep 2025 13:15 PM IST

சென்னை, செப்டம்பர் 04 : ஓணம், மிலாது நபி, வார இறுதி விடுமுறையை முன்னிட்டுபோக்குவரத்து கழகம் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது (TNSTC Special Buses). தொடர் விடுமுறையையொட்டி, 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது பேருந்து சேவை. பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, வெளியூர் செல்பவர்கள் நாள்தோறும் பயணிக்கின்றனர். விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே, பயணிகள் சிரமமின்றி பயணிக்க, அவ்வப்போது சிறப்பு பேருந்துகளை தமிழக போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.

அந்த வகையில், 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான நாளை மிலாது நபி, ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதோடு, தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இதனால், வழக்கத்தை விட, பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

Also Read : தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்.. பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூருக்கு 2025 செப்டம்பர் 4ஆம் தேதி 710 பேருந்துகளும், செப்டம்பர் 5ஆம் தேதி 405 பேருந்துகளும், செப்டம்பர் 7ஆம் தேதி 875 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் 2025 செப்டம்பர் 4,5ஆம் தேதிகளில் 105 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 2025 செப்டம்பர் 4ஆம் தேதி 25 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

Also Read : விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு..

பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத் இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 4 ஆம் தேதி 23,032 பேரும், செப்டம்பர் 7 ஆம் தேதி 20,000 க்கும் மேற்பட்டவர்களும் முன்பதிவு செய்தனர். பயணிகள் TNSTC செயலி அல்லது இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.