AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓட்டு போட சொந்த ஊர் சென்ற போது கோர விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..

மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக பேருந்து, விமானங்ககளில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெளிநாடுகளில் வசிப்போர் குடும்பமாக விமானங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

ஓட்டு போட சொந்த ஊர் சென்ற போது கோர விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..
விபத்தில் சிக்கிய கார்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Apr 2026 08:47 AM IST

கிருஷ்ணகிரி, ஏப்.22: ஓசூர் அருகே தருமபுரி நோக்கி சென்ற கார் எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் நாளை 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், இந்த தேர்தலில் அரசியல் களம் மிகுந்த சுவாரஸ்யமாக நான்கு முனை போட்டியாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஓட்டு போட போறீங்களா? இதையெல்லாம் மறக்காம எடுத்துட்டு போங்க!

4 முனைப் போட்டியால் சுவாரஸ்யம்:

திமுகவுக்கு மாற்றாக அதிமுகவும், அதிமுகவுக்கு மாற்றாக திமுகவையும் தேர்ந்தெடுத்து வந்த தமிழக மக்களுக்கு மூன்றாவது, நான்கவது தேர்வுகளை இந்த அரசியல் களம் வழங்கியுள்ளது. இதன் காரணமாகவே இத்தேர்தல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 4 தரப்புகளிலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தங்களை எந்த தலைவர் ஆள வேண்டும் என்பதை மக்கள் தான் இனி தீர்மானிக்கப்போகிறார்கள். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மே.4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வெளியூர்களில் இருந்து படையெடுக்கும் மக்கள்:

இதனிடையே, மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக பேருந்து, விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெளிநாடுகளில் வசிப்போர் குடும்பமாக விமானங்களில் வந்த வண்ணம் உள்ளனர். உள்நாட்டில் இருப்பவர்கள் நேற்றும், இன்றும் சொந்த ஊர் செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர். ரயில் டிக்கெட் கிடைக்காத நிலையில், பலரும் காரில் பயணித்து வருகின்றனர்.

ஆம்னி பேருந்து மீது கார் மோதி விபத்து:

அப்படி, பெங்களூருவில் இருந்து ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் சென்றபோது எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த நான்கு பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. தொடர்ந்து, சதீஷ் என்ற இளைஞர் மட்டும் பலத்த காயமடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிக்க: கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை.. நான் செய்த திட்டங்கள் எனக்காக ஓட்டுக்கேட்கும் – முதல்வர் ஸ்டாலின்..

விபத்தால் பெரும் சோகம்:

ஜனநாயக கடமையாற்ற உற்சாக கிளம்பியவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களை இழந்து பரிதவித்தது காண்போரை கலங்க செய்தது.

Follow Us