தவெக தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு.. விஜய் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

TVK Vijay : தமிழக வெற்றிக் கழக தலைமை அக்கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ’மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என தவெக பரப்புரையை முன்னெடுத்துள்ள நிலையில், அது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

தவெக தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு.. விஜய் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

தவெக தலைவர் விஜய்

Updated On: 

27 Jul 2025 08:34 AM

சென்னை, ஜூலை 27 : தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam) தலைமை கட்சி தொண்டர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் நெருக்கும் நிலையில், கட்சி தொண்டர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தவெக வெளியிட்டுள்ளது.  தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தற்போதே பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. திமுக ஓரணியில் தமிழ்நாடு, அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், பாமக சார்பில் உரிமை மீபு பயணம் என்பதை கையில் எடுத்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற பிரச்சாரத்தை அக்கட்சி தலைமை முன்னெடுத்துள்ளது. இந்த பிரச்சாரம் மூலம் தவெக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தவெகவில் உறுப்பினராக இணையம் மக்களின் வீடுகளில் முதல்வர் வேட்பாளர் என்ற விஜய் புகைப்படும் கொண்ட ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பரப்புரை தொடர்பாக தவெக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைமை வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, ” தற்போது தமிழகச் சட்டமன்ற தேர்தல் பரபரப்புக் காலம். கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டிய வேளை, கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கழக தோழர்கள் ஒருபோதும் செயல்படக் கூடாது.

Also Read : லட்சிய கூட்டமா..? சினிமா ரசிகர் கூட்டமா..? போர்தான் இனி.. விஜயை மறைமுக எதிர்த்த சீமான்!

தவெக தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு


தேர்தல் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளுக்காக வீடு வீடாகச் செல்லும் போது, தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ள பரப்புரை வாசகங்கள் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட ஸ்டிக்கர் மட்டுமே ஒட்ட வேண்டும்.

தலைமைக் கழகத்தால் முறைப்படி அறிவிக்கப்படாத, அனுமதிக்கப்படாத வேறு வாசகங்களையோ புகைப்படத்தையோ, ஸ்டிக்கராகவோ, வேறு வடிவங்களிலோ, கழக நிகழ்ச்சிகளுக்காக, பரப்புரைக்காக அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது.

தனிப்பட்ட விதத்திலும் தலைமைக் கழகத்தால் பிரத்தியேகமாகத் தேர்தல் பரப்புரை சார்ந்து அங்கீகரிக்கப்படாத பேனர் டிசைன்கள், இலச்சினைகள், வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது. மேலும் பரப்புரை தொடர்பான அனைத்திலும் கட்டுப்பாட்டுடன் இந்த நடைமுறையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும்.

Also Read : பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம்.. 2 வாரம் தான் டைம்.. விஜய் போட்ட உத்தரவு!

அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கழகத்தின் அனைத்து நிலை அமைப்புகளின் சார்பிலும் நடத்தப்படும் உள்ளரங்கு மற்றும் பொதுவெளி, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளின் போது, கழக நிர்வாகிகளும் தோழர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.