AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமைச்சருக்கு தவெக நிர்வாகி பணமாலை: விஜய் அதிருப்தி; மன்னிப்பு கேட்ட மாவட்ட செயலாளர்

Cash Garland Controversy: திருவண்ணாமலை தவெக மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ரூ.500 நோட்டு மாலை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கட்சிக் கொள்கைக்கு எதிரானது என புகார் எழுந்தது. பாரதிதாசன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். மாற்றுக் கட்சியினரை விழாக்களுக்கு அழைக்க மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.

அமைச்சருக்கு தவெக நிர்வாகி பணமாலை: விஜய் அதிருப்தி; மன்னிப்பு கேட்ட மாவட்ட செயலாளர்
அமைச்சருக்கு தவெக நிர்வாகி பணமாலைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 11 Jun 2025 10:47 AM IST

திருவண்ணாமலை ஜூன் 11: திருவண்ணாமலை (Thiruvannamalai) மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் பாரதிதாசன் (Tamilnadu Vetri Kazhaga Secretary Bharathidasan) தனது வீட்டு கிரஹப்பிரவேச விழாவுக்கு திராவிட முன்னேற்ற கழக அமைச்சர் எ.வ. வேலுவை (Minister E.V. Velu) அழைத்தார். விழாவில் ரூ.500 நோட்டு மாலை அணிவித்தது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவுடன் தொடர்பு இல்லையென்ற தவெகக் கொள்கைக்கு இது எதிராக உள்ளது என கட்சியினர் புகார் அளித்தனர். இதையடுத்து, பாரதிதாசன் தவறை ஒப்புக்கொண்டு தலைமைக்கு மன்னிப்பு கேட்டார். இனி மாற்றுக் கட்சி உறுப்பினர்களை விழாவுக்கு அழைக்க மாட்டேன் என உறுதியளித்தார். இந்த விவகாரம் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சருக்கு பணமாலை அணிவித்த விவகாரம்

தமிழக வெற்றிக் கழக (தவெக)த்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர் பாரதிதாசன், சமீபத்தில் வீடு கட்டி குடியேறியதை முன்னிட்டு, கடந்த 2025 ஜூன் 8-ம் தேதி கிரஹப்பிரவேச விழா நடத்தியிருந்தார். அந்த விழாவுக்கு திமுக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவையும் அழைத்திருந்தார். விழாவில், பாரதிதாசன் அமைச்சர் வேலுவுக்கு ரூ.500 நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை அணிவித்து வரவேற்பு அளித்தது, சமூக வலைதளங்களில் பரவியது.

விஜய் அதிருப்தி; மன்னிப்பு கேட்ட மாவட்ட செயலாளர்

தினமலர் நாளிதழில் வெளியிட்ட தகவலின் படி, திருவண்ணாமலை தவெக மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ரூ.500 நோட்டு மாலை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காணொளி மற்றும் சம்பவம் தவெக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தவெக தலைவர் விஜய்க்கு சிலர் புகார் அளித்ததாகவும், இந்த நடவடிக்கை கட்சியின் கொள்கைக்கு எதிரானது என தலைமை குறிப்பிடியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் திமுகவுடன் அரசியல் பந்தமில்லை என்று ஆரம்பத்தில் விஜய் அறிவித்திருந்த நிலையில், திமுக அமைச்சருக்கு இவ்வாறு மரியாதை அளித்தது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தவெக கட்சியினரே கண்டனம்

கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கடிதம்

இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலர் பாரதிதாசன், கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், விழா ஒரு குடும்ப நிகழ்வாக இருந்தது என்றும், நண்பராக இருப்பதால் வேலுவை அழைத்ததாகவும், அவர் அமைச்சராவதால் மரியாதையாக பணமாலை அணிவித்தது தவறுதலாக நடந்தது என்றும் வருந்தினார். மேலும், இனி மாற்றுக் கட்சியினர் கலந்து கொள்ளும் வகையில் விழா நடத்த மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம், விஜய் தலைமையிலான தவெக கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படலாம் என்பதை உணர்த்தும் முக்கியமான முன்னுதாரணமாகும்.

Follow Us