தமிழகத்தில் 6 நாட்களுக்கு கொட்டும் மழை.. எங்கெங்கு தெரியுமா? சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் 6 நாட்களுக்கு தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன் 24 : தமிழகத்தில் 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் (Tamil Nadu Weather Update) என வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. அதோடு, சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 2025 மே மாதம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. 2025 ஜூன் மாதத்தில் வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால், அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. கடந்த வாரம் கூட, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன்பிறகு, பெரிய மழை அளிவில் மழை பொழிவு இல்லை. பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு கொட்டும் மழை
சென்னை உள்பட வடகிழக்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இருந்தது. வெயில் ஒருபுறம் இருந்தாலும், ஒருசில இடங்களில் கடந்த மூன்று தினங்களாகவே மழை பெய்து வருகிறது. 2025 ஜூன் 22ஆம் தேதி கூட, சென்னையில் இரவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.




இதனால், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்த சென்னை, ஜில்லேன மாறியது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, 2025 ஜூன் 24ஆம் தேதியில் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
REGIONAL DAILY WEATHER REPORT pic.twitter.com/WWtJLxhC69
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 23, 2025
சென்னை பொறுத்தவரை, 2025 ஜூன் 24ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் 2025 ஜூன 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.