அடுத்த 5 நாட்களுக்கு அலர்ட்… வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

Tamil Nadu Weather Update : தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தலைநகர் சென்னையிலும் மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு அலர்ட்... வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழக்ததில் மழை

Published: 

20 Aug 2025 06:15 AM

 IST

சென்னை, ஆகஸ்ட் 20 : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் (Tamil Nadu Weather) என வானிலை மையம் (Tamil Nadu IMD) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் (Chennai Weather) 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், அவ்வப்போது மாலை நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திராதெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரையில் நிலவுகிறது. இது தற்பது தெற்கு ஒரிசா உடப்குதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுக்குறையக் கூடும். மேலும், தெற்கு குஜராத்வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அதோடு, தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Also Read : வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை..

5  நாட்களுக்கு வெளுக்கும் கனமழை

இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான பெய்யக் கூடும் எனவும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us
Related Stories
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
சென்னை எழும்பூரில் வரப்போகுது மெகா அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்… எப்போது தெரியுமா?
20 நாட்களுக்கான கையிருப்பில் வீட்டு சிலிண்டர்கள்.. விற்றுத் தீர்ந்த வணிக சிலிண்டர்கள்.. சென்னையில் ஹோட்டல்கள் மூடல்..
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..
பழங்களில் எலி மருந்து தடவும் சாலையோர வியாபாரி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
டெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதல்: மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் தீவிரம்