அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு..
Tamil Nadu Weather Alert: அரபிக் கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 18, 2025 தேதியான இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 18, 2025: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரமாக இருந்து வருகிறது இதன் காரணமாக தமிழகத்தில் அனேக பகுதிகளில் குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் மேல் கூடலூர் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 14, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி) தலா 9, சோலையார் (கோயம்புத்தூர்) 8 செ. மீ மழை பதிவாகியுள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகஸ்ட் 18 2025 தேதியான இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆகஸ்ட் 19 2025 ஆம் தேதி ஆன நாளை தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலூர் பகுதிகளை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை:
அதேபோல் தெற்கு கொங்கன் வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் மத்திய கிழக்கு தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 18 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 19 2025 முதல் ஆகஸ்ட் 24 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ராமதாஸின் பொதுக்குழு.. அன்புமணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
சென்னையில் தொடரும் மழை:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 18, 2025
சென்னை பொறுத்த வரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை என்பது 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்.. திமுகவுக்கு எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல்!
சென்னையில் ஆகஸ்ட் 17 2025 தேதியான நேற்று மாலை முதல் இரவு முழுவதும் விட்டு விட்டு நகரின் அனேக பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த மழையானது அடுத்து வரும் சில தினங்களுக்கும் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது