Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்.. திமுகவுக்கு எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல்!

Vice President Election: தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தமிழக பாஜகவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவரை நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.,க்கள் ஆதரிப்பாளர்களா, எதிர்ப்பாளர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்.. திமுகவுக்கு எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல்!
சி.பி.ராதாகிருஷ்ணன் - மு.க.ஸ்டாலின்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Aug 2025 13:04 PM

தமிழ்நாடு, ஆகஸ்ட் 18: துணை குடியரசு தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (C.P.Radhakrishnan) அறிவிக்கப்பட்டுள்ளார். யாரும் எதிர்பாராத வகையில் வெளியான இந்த அறிவிப்பு தமிழக பாஜக தொண்டர்களிடையே மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் 2026 சட்டமன்ற தேர்தலை  (2026 Assembly election) மனதில் வைத்து பாஜக இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இப்படியான நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பெரும்பான்மை பலத்துடன் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் நாடாளுமன்றத்தில் 2025 செப்டம்பர் 9ம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக அளவிலான உறுப்பினர்கள் உள்ளதால் சிபி ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகி உள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதித்து வருகின்றனர்.

சிக்கலில் திமுக

இப்படியான நிலையில் நாடாளுமன்றத்தில் மக்களவையில் திமுகவுக்கு அதன் கூட்டணிக் கட்சியை சேர்த்து 40 எம்பிக்கள் உள்ளனர். அதே போல் மாநிலங்களவையில் திமுக சார்பில் 11 பேர் திமுகவை சேர்ந்தவர்களும், மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த கமல்ஹாசன் உள்பட 12 உறுப்பினர்கள் உள்ளனர். இப்படியான நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அந்த கூட்டணி வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர யாரையாவது நிறுத்தினால் அவர்களுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read: பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.. இவர் கடந்து வந்த பாதை என்ன?

அப்படி செய்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த  சி.பி.ராதாகிருஷ்ணனை  திமுக புறக்கணித்ததாக விமர்சனம் எழும். அதேசமயம் இந்தியா கூட்டணி முடிவுக்கு எதிராக அரசியல் எதிரியாக அறியப்படும் பாஜக கூட்டணியை சேர்ந்தவரை வேட்பாளராக ஆதரித்தாலும் அதிலும் சிக்கல் உண்டாகும். இப்படியான சிக்கலில் திமுக மாட்டிக் கொண்டுள்ளது. இது பாஜகவின் மாஸ்டர் பிளான் ஆக அறியப்படுகிறது. ஒருவேளை சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்காவிட்டால் அது திமுக கூட்டணிக்கு எதிராக தமிழக சட்டமன்ற தேர்தலில் திசை திருப்ப பயன்படும் ஆயுதமாகவும் மாறியுள்ளது.

ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை குடியரசு தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ஏபிஜே அப்துல் கலாம் பதவி வகித்தார். அவர் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படுவதை அப்போது திமுக தலைவராகவும், மத்திய அரசின் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கருணாநிதி எதிர்த்ததாக அரசியல் களத்தில் இன்றளவும் ஒரு கூற்று முன்வைக்கப்படுகிறது.

Also Read: எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

தமிழர் வேட்பாளரா?

இப்படியாக தமிழர்களுக்கு எதிராக திமுக செயல்படுவதாக எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக எழுந்துள்ள சங்கடமான சூழலை தவிர்க்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பரிசீலிக்க வேண்டும் என திமுக தரப்பில் இந்தியா கூட்டணியில் முறையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.