பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.. இவர் கடந்து வந்த பாதை என்ன?
BJP Vice President Candidate: துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது. இதனை ஜே.பி நட்டா அறிவித்தார்.

டெல்லி, ஆகஸ்ட் 17, 2025: தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வரவிருக்கும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தங்கர் உடல்நிலை காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். தனது ராஜினாமாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவும் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அடுத்த துணை ஜனாதிபதியாக யார் இருப்பார் என்ற பெரும் கேள்வி நிலவி வந்தது. இதனை அடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் 2025, செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2025 செப்டம்பர் 9ஆம் தேதியே ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி நடைபெற்று வருகிறது.
அடுத்த துணை ஜனாதிபதி தேர்தல்:
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு சில தகுதிகள் விதிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த ஒரு அரசு பதவியிலும் இருக்கக்கூடாது. அதேபோல் 35 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். துணை ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். அடுத்த துணை ஜனாதிபதியாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்விக்கு பல்வேறு யூகங்கள் வெளியானது.
அதாவது பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வி கே சக்ஸினா, 66 வயதான மனோஜ் சின்ஹா, ஜனதா தளம் எம்பி ஹரிவன்ஷ் நாராயண சிங் உள்ளிட்டோர் பட்டியலில் இடம் பெற்றனர். ஆனால் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வரவிருக்கும் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: 7 நாட்களுக்குள் விளக்கம்.. இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் தேர்வு:
Maharashtra Governor CP Radhakrishnan will be the NDA’s candidate for the Vice Presidential election.
– BJP national President & Union Minister @JPNadda #VicePresidentialElection | #CPRadhakrishnan pic.twitter.com/bdbhAWgYpz
— All India Radio News (@airnewsalerts) August 17, 2025
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தனது வேட்புமனுவை அறிவித்த போது, ” சி.பி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளாலும் மதிக்கப்படுகிறார். அடுத்த துணை ஜனாதிபதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எதிர்க்கட்சி தலைவர்களை நாங்கள் தொடர்பு கொண்டு உள்ளோம்” என்றார். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17, 2025) புது தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க: ‘இந்த 3 பிரிவினர் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம்’ ஜனாதிபதி திரௌபதி முர்மு பேச்சு!
யார் இந்த சி.பி ராதாகிருஷ்ணன்?
சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையிலிருந்து இரண்டு முறை எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேலும் ஏ.பி வாஜ்பாய் மற்றும் எல்.கே அத்வானி ஆகியோரின் கீழ் பணியாற்றிய பாஜகவின் பழைய தலைவர்களில் ஒருவர் ஆவார். தமிழ்நாட்டில் திருப்பூரில் அக்டோபர் 20, 1957ஆம் ஆண்டு பிறந்த ராதாகிருஷ்ணன் 1970களில் ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்தார். பின்னர் 1974 பாரதிய ஜனதா சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரானார். 2024 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் இருந்து போட்டியிட்ட அண்ணாமலை போன்ற தலைவர்களுக்கு வழிவகுக்கும் வகையில் அவர் 2023 ஆம் ஆண்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.