
சி.பி. ராதாகிருஷ்ணன் (C.P. Radhakrishnan)
சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையிலிருந்து இரண்டு முறை எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேலும் ஏ.பி வாஜ்பாய் மற்றும் எல்.கே அத்வானி ஆகியோரின் கீழ் பணியாற்றிய பாஜகவின் பழைய தலைவர்களில் ஒருவர் ஆவார். தமிழ்நாட்டில் திருப்பூரில் அக்டோபர் 20, 1957ஆம் ஆண்டு பிறந்த ராதாகிருஷ்ணன் 1970களில் ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்தார். பின்னர் 1974 பாரதிய ஜனதா சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரானார். 2024 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் இருந்து போட்டியிட்ட அண்ணாமலை போன்ற தலைவர்களுக்கு வழிவகுக்கும் வகையில் அவர் 2023 ஆம் ஆண்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
Vice President Election Date: நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல்.. எப்போது? வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் முடிவு.. முழு விவரம்..
Vice President Election: நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் 2025, செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வாக்குப்பதிவு நடைப்பெறும் அதே நாளில் முடிவுகளும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 18, 2025
- 17:07 pm
CP Radhakrishnan : இதுதான் சி.பி.ராதாகிருஷ்ணன் வீடு.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல் நிலை சிக்கல் காரணமாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், பாஜக கூட்டணியில், துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
- C Murugadoss
- Updated on: Aug 18, 2025
- 16:17 pm
துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்.. அன்புமணி ராமதாஸ் ஆதரவு..
Anbumani Support To C.P Radhakrishnan: இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், குடியரசு துணைத் தலைவர் பதிவுக்கு அவர் சரியான தேர்வு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 18, 2025
- 16:34 pm
சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இந்தியக் கூட்டணி? முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..
Vice President Election: துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும்படி பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 18, 2025
- 16:37 pm
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்.. திமுகவுக்கு எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல்!
Vice President Election: தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தமிழக பாஜகவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவரை நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.,க்கள் ஆதரிப்பாளர்களா, எதிர்ப்பாளர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Aug 18, 2025
- 16:41 pm
CP Radhakrishnan: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா?
CP Radhakrishnan Family Expressions: சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அவரின் சொந்த ஊரான கோவையில் பாஜக தொண்டர்களும், அவரின் ஆதரவாளர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மை பலம் காரணமாக அவரது வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Aug 18, 2025
- 16:41 pm
Who is C.P. Radhakrishnan: பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.. இவர் கடந்து வந்த பாதை என்ன?
BJP Vice President Candidate: துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது. இதனை ஜே.பி நட்டா அறிவித்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 18, 2025
- 16:38 pm
முதலமைச்சர் ஆளுநரின் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது – சி.பி.ராதாகிருஷ்ணன்!
மாவீரன் அழகு முத்துக்கோனின் 314வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 11) கொண்டாட்டப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு மாநிலத்தின் ஆளுநர் எப்படி ஒரு முதலமைச்சரின் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது என நினைக்கிறார்களோ, அதேபோல் முதலமைச்சர் ஆளுநர் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது என தெரிவித்தார்.
- Petchi Avudaiappan
- Updated on: Aug 18, 2025
- 16:41 pm
முருகனையும், தமிழ் மண்ணையும் யாராலும் பிரிக்க முடியாது – சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னரும் பாஜக தலைவருமாகிய சி.பி.ராதா கிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முருகனையும் தமிழ் மண்ணையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. முருகன் பெருமான் வட மாநிலங்களில் கார்த்திக்காக கொண்டாடப்படுகிறார். ஆனால் அவர் தமிழ் மண்ணில் கந்தனாக கொண்டாடப்படுகிறார். மேலும் முருகனுடைய அறுபடை வீடுகளும் தமிழ் மண்ணில் தான் அமைந்திருக்கிறது. இந்து முன்னணியினர் மதுரை மீனாட்சி அம்மனின் புதல்வனை ஆறு படைகளில் இருந்தும் மதுரைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். ஆன்மிகமும் அரசியலும் ஆரம்ப காலம் தொட்டு தமிழகத்தில் இருந்து வருகிறது. இந்த மாநாடு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்று பேசினார்.
- Karthikeyan S
- Updated on: Aug 18, 2025
- 16:41 pm