Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vice President Election Date: நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல்.. எப்போது? வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் முடிவு.. முழு விவரம்..

Vice President Election: நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் 2025, செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வாக்குப்பதிவு நடைப்பெறும் அதே நாளில் முடிவுகளும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vice President Election Date: நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல்.. எப்போது? வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் முடிவு.. முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Aug 2025 17:07 PM

துணை ஜனாதிபதி தேர்தல், ஆகஸ்ட் 18, 2025: இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து அடுத்த துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரக் கூடிய 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 17 2025 தேதியான நேற்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 15 வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 21 2025 உடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 2025 அன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும்.

மேலும் படிக்க: துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்.. அன்புமணி ராமதாஸ் ஆதரவு..

நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:

அதனைத் தொடர்ந்து 2025 ஆகஸ்ட் 25 அன்று பேட்புமனு திரும்பப்பெறுவதற்கான கடைசி தேதி ஆகும். பின்னர் நாட்டின் 15 ஆவது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 9 2025 அன்று நடைபெறுகிறது. அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் துணை ஜனாதிபதி தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராஜ்நாத் சிங்கின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேர்தல் முகவராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 7 நாட்களுக்குள் விளக்கம்.. இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் பலம்:

தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையில் 293 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 133 உறுப்பினர்களும் உள்ளனர். மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 426 ஆகும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளரை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க இந்த எண்ணிக்கை போதுமானது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.