Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

த.வெ.க வின் இரண்டாவது மாநில மாநாடு.. 5 குழுக்கள் அறிவித்த தலைமை..

TVK Conference At Madurai: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வரும் 2025, ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்காக 5 குழுக்களை அமைத்து தலைமை கழகம் தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

த.வெ.க வின் இரண்டாவது மாநில மாநாடு.. 5 குழுக்கள் அறிவித்த தலைமை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Aug 2025 20:52 PM

சென்னை, ஆகஸ்ட் 15, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக ஐந்து ஒருங்கிணைப்பு குழுக்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்த தமிழக வெற்றிக் கழகம் தலைமை அறிவித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பிலும் தேர்தல் பணிகள் மும்முறமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜயால் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கியது முதலே 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் தலைவர் விஜய். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் – கூட்டணி நிலைப்பாடு:

தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் பாஜக மற்றும் திமுகவுடன் நிச்சயமாக கூட்டணி கிடையாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் அதிமுகவும் கூட்டணி கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் காலமானார்..

இதன் காரணமாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் தலைவர் விஜய் களமிறங்குகிறார். இப்படி தேர்தலுக்கான நகர்வுகள் முன்வைக்கப்பட்ட வரும் நிலையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மதுரையில் மாநில மாநாடு:

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. முதலில் இந்த மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டது ஆனால் முறையான அனுமதி கொடுக்கப்படாத நிலையில் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு தென் மாவட்டங்களில் தவெகாவின் பலம் மற்றும் கொள்கை கோட்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமையும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: திமுக கூட்டணி உடைக்க முனைப்புடன் உள்ளனர்.. இது அற்ப தனமான ஒன்று – திருமாவளவன்..

5 குழுக்கள் அமைத்து அறிவிப்பு:


இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் உத்தரவின் பெயரில் மாநாட்டுப் பணிகளுக்கு என பல்வேறு ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தமிழக வெற்றிக்கழகம் தலைமை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாநாடு தலைமை ஒருங்கிணைப்பு குழு, தீர்மானக்குழு, ஊடக ஒருங்கிணைப்பு குழு, தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு மற்றும் மேடை ஒருங்கிணைப்பு குழு அடங்கும்.