AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகும் மழை.. சென்னையில் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகும் மழை..  சென்னையில் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட்
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Jul 2025 14:55 PM IST

சென்னை, ஜூலை 29 :  தமிழகத்தில் அடுத்த  7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் (Tamil Nadu Rains) என வானிலை மையம் (Tamil Nadu Weather Alert) தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, 2025 ஜூலை மாத தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், அதன்பிறகு, பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. இருப்பினும், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. கடந்த இரு நாட்களாக வெயில் அடித்து வருகிறது. இதனால், கடந்த இரு மாதங்களில் மழை பொழிவு என்பது மிகவும் குறைவு.

இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 2025 ஜூலை 29ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்.. வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்

அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகும் மழை


மேலும், 2025 ஜூலை 31ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 29,30ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : 5 நாட்களுக்கு பிச்சு உதறபோகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளில் 2025 ஜூலை 29ஆம் தேதி ஆகஸ்ட் 2ஆம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us