நீலகிரி டூ கோவை.. இன்று கொட்டப்போகும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. ஆனால், பெரிய அளவில் பொழிவு இல்லை. இந்த நிலையில், 2025 ஜூலை 26ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூலை 27 : தமிழகத்தில் 2025 ஜூலை 27ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் (Tamil Nadu Weather Update) என வானிலை மையம் (IMD Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. 2025 ஜூலை மாத தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், அதன்பிறகு பல்வேறு மாவட்டஙகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பொழிவு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை, இரவு மற்றும் மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.
குஜராத் வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறு காரணமாக, 2025 ஜூலை 27ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது. தொடர்ந்து, 2025 ஜூலை 27ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மலை பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.




Also Read : 6 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் கனமழை.. சென்னையில் நிலவரம் என்ன? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
இன்று கொட்டப்போகும் கனமழை
DAILY WEATHER REPORT FOR TAMILNADU, PUDUCHERRY & KARAIKAL AREA pic.twitter.com/9T1rzyOTqC
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) July 26, 2025
2025 ஜூலை 25ஆம் தேதி முதல் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 2025 ஜூலை 27ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்.. வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்
மீனவர்கள் 2025 ஜூலை 30ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும். இதனால், 2025 ஜூலை 30ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.