வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்.. வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்..  வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்

மழை

Updated On: 

24 Jul 2025 14:07 PM

 IST

சென்னை, ஜூலை 24 : வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை மையம் (Tamil Nadu Weather Update) தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம் – வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, 2025 ஜூலை மாதத்தில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கூட கடந்த சில தினங்களாகவே, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் 2025 ஜூலை 24ஆம் தேதியான இன்று காலை 05.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம் – வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா – கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : சென்னையில் விடிய விடிய மழை.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?

தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை


2025 ஜூலை 24,25ஆம் தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 ஜூலை 26ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஜூலை 27ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்போகும் மழை..

2025 ஜூலை 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 24,25ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்குளோசர் டே படம்
மார்பக புற்றுநோய்.. தழும்புகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஏஞ்சலினா ஜோலி
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்