தேர்வர்களே அலர்ட்.. டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

TET Exam 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2025 செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. 2025 செப்டம்பர் 8ஆம் தேதி விண்ணப்பப் பதிவு முடிந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கை ஏற்று இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டது.

தேர்வர்களே அலர்ட்.. டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க  கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

டெட் தேர்வு

Published: 

10 Sep 2025 06:30 AM

 IST

சென்னை, செப்டம்பர் 10 : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET Exam 2025 ) ஆன்லைன் விண்ணப்ப பதிவு 2025 செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால், விண்ணப்பிக்காத தேர்வர்கள் விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 2011ஆம் ஆண்டு முதல் 1 முதல் 8ஆம் தேதி வரை பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எனும் தேர்வு தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இடைநிலை ஆசீரியர்கள் டெட் தாள் ஒன்றிலும், பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தாள் இரண்டிலும் தேர்வு பெற வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டு வருகிறது. டெட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வை ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர்.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான டெட் தேர்வு 2025 நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான விண்ணப்பப்பதிவு 2025 செப்டம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளை ஏற்று, டெட் தேர்வுக்காக விண்ணப்பிக்கும் அவகாசம் 2025 செப்டம்பர் 10ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாலை 6 மணியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைகிறது. 2025 செப்டம்பர் 9ஆம் தேதியான நேற்று நிலவரப்படி, 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

Also Read : +1 பொதுத்தேர்வு ரத்து.. 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • டெட் தேர்வுக்கு டிஆர்பி (TRB) இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் APPLY என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் இரண்டு தாள்களுக்கு தனித்தனியாக இணைப்பு வழங்கப்பட்டு இருக்கும்.
  • அதில் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் தாளுக்கான APPLY NOW என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
  • தொடர்ந்து, இமெயில், மொபைல் நம்பர், கல்வித் தகுதி உள்ளிட்ட கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
  • மேலும், விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, Submit என்ற ஆப்ஷை கிளிக் செய்ய வேண்டும். மேலும், விண்ணப்பத்தை பதிவிறக்கமும் செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். இதில் பழங்குடி, பட்டியலின, மாற்றுத்திறனாளி தேர்வர்கள் ரூ.300 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடவும், அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்திலேயே பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கான போட்டித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

Also Read : முதுகலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது? TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சமீபத்தில், உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதாவது, ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. தேர்ச்சி பெறாவிடில் வேலையைவிட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.