AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காந்தி ஜெயந்தி வார விடுமுறை.. தமிழகத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. விவரம் இதோ!

Tamil Nadu Special Buses for Gandhi Jayanti | தமிழகத்தில் காந்தி ஜெயந்தி காரணமாக மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்த நிலையில் தான், தொடர் விடுமுறைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

காந்தி ஜெயந்தி வார விடுமுறை.. தமிழகத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Sep 2026 08:04 AM IST

சென்னை, செப்டம்பர் 29 : தமிழகத்தை (Tamil Nadu) பொருத்தவரை பண்டிகை காலம் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்த வாரம் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காரணம், காந்தி ஜெயந்தி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 02, 2026) வருவதன் காரணமாக அதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் வார விடுமுறை வருகிறது. எனவே மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறையாகும் நிலையில், ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள்

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அக்டோபர் 01, 2026 (வியாழக்கிழமை), அக்டோபர் 02, 2026 (வெள்ளிக்கிழமை), அக்டோபர் 03, 2026 (சனிக்கிழமை) மற்றும் அக்டோபர் 04, 2026 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர மாவட்டங்களுக்கும், பிற பகுதிகளில் இருந்து வேறு சில பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஊட்டியிலிருந்து மசினகுடிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஆயிரக்கணக்கில் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டம்

குறிப்பாக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 01, 2026 அன்று சுமார் 1,580 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, அக்டோபர் 02, 2026 அன்று சுமார் 745 பேருந்துகளும், அக்டோபர் 03, 2026 அன்று சுமார் 895 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. 2,094 தபால் வாக்குகள் பதிவு.. தேர்தல் அலுவலர்கள் தகவல்!

சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு அக்டோபர் 01, 2026 அன்று 220 பேருந்துகளும், அக்டோபர் 02, 2026 அன்று 115 பேருந்துகளும், அக்டோபர் 03, 2026 அன்று 115 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதேபோல சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்பும் பொதுமக்களுக்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us