AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu School Reopening: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..? தமிழ்நாடு அரசு விளக்கம்!

School Reopening Confirmation Tamil Nadu: தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவிய தள்ளிப்போடப்படும் என்ற வதந்தியை அரசு மறுத்துள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதில் நன்னெறி வகுப்புகள், போதைப்பொருள் விழிப்புணர்வு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் வாசிப்பு நேரம் ஆகியவை அடங்கும்.

Tamil Nadu School Reopening: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..? தமிழ்நாடு அரசு விளக்கம்!
பள்ளிகள் திறப்புImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 May 2025 18:29 PM IST

சென்னை, மே 30: தமிழ்நாட்டில் (Tamil Nadu) பள்ளிகளின் கோடை விடுமுறைகள் விரைவில் முடிவுக்கு வர இருக்கின்றன. வெயில் மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு (School Reopen) தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. அதில், 2025 ஏப்ரல் 30 முதல் 2025 ஜூன் 1 வரை நீடித்த விடுமுறை காலத்திற்குப் பிறகு 2025 ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், வானிலை நிலையைப் பொறுத்து தேதிகள் மாறக்கூடும் என்ற செய்திகள் பரவியது. இந்தநிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவது உண்மைதான என்பது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..?

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் முதலில் திட்டமிட்டபடியே வருகின்ற 2025 ஜூன் 2ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2025 ஏப்ரல் 25ம் தேதி தொடங்கிய கோடை விடுமுறை வருகின்ற 2025 ஜூன் 1ம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து, பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகலாம் என்ற தகவல் வெளியாகியது. இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்புகள் தள்ளிப்போகிறதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கலந்தாலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். ஆனால், தள்ளிப்போகிறது என அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

சமூக வலைதளங்களில் இதுதொடர்பான செய்திகள் வெளியானதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாக சில தகவல்களை வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் பள்ளிகள் வருகின்ற 2025 ஜூன் 9ம் தேதி திறப்பதாக பரவும் செய்தி வதந்தி. அதன்படி, வருகின்ற 2025 ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி என்று தெரிவித்துள்ளது.

பள்ளி அதிகாரிகளுக்கு உத்தரவு:

தமிழ்நாட்டில் மீண்டும் திறப்பதற்கு முன்னதாக, பள்ளிக் கல்வித்துறை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்,

  •  வாரத்திற்கு ஒரு முறை அனைத்து பள்ளிகளிலும் நன்னெறி வகுப்புகள் நடைபெற வேண்டும்.
  • போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முயற்சிகளை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பேச்சுகள், கவிதைகள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.
  • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உடனடியாகவும் நல்ல தரத்துடனும் வழங்கப்பட உள்ளது.
  • மதிய உணவுக்குப் பிறகு, அனைத்து மாணவர்களுக்கு குழந்தைகள் தொடர்பான பத்திரிகைகளைப் படிக்க 20 நிமிடங்கள் வழங்கப்பட வேண்டும்

என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Follow Us