AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dream Olympics 2036: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி பரிசு – தமிழக அரசு அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களுக்கு ரூ.5 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை உயர்வு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dream Olympics 2036: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி பரிசு – தமிழக அரசு அறிவிப்பு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Oct 2026 08:31 AM IST

அக்டோபர் 9, 2026: தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்லும் நோக்கில், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்:

தமிழக வீரர்கள் உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கான பாராட்டு விழாவில், முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கு.. 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செல்லுமா?.. இன்று தீர்ப்பு!!

பதக்கங்களுக்கு ஏற்ப பரிசுத்தொகை:

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களுக்கு ரூ.5 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை உயர்வு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: டிரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டத்தை துவக்கிவைத்த முதல்வர் விஜய் – வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.50 கோடி பரிசு

வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத்தொகை:

ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் மற்றும் பாரா காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களையும் திட்டத்தில் இணைத்து, மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை உள்ளிட்ட ஆதரவு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், பயிற்சியாளர்களுக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையில் 50 சதவீதம் வழங்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த உறுதி:

தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றும், அவை படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் ஒலிம்பிக் தரத்திலான விளையாட்டு வசதிகளை உருவாக்குவது அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us