Maduranthakam and Dharapuram Bypoll Result Live: இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை
Tamil Nadu By-Polls Counting Live Updates in Tamil: மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த தேர்தலை விட குறைவாக வாக்குகள் பதிவான நிலையில் ரிசல்ட் எப்படி இருக்குமென தமிழக அரசியலே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று இரு தொகுதிகளுக்கான ரிசல்ட் வெளியாகவுள்ளது.
LIVE NEWS & UPDATES
-
Tamil Nadu By Election 2026 Result: மதுராந்தகம்- தாராபுரம் வாக்கு எண்ணிக்கை.. வெற்றி யாருக்கு?
தமிழகத்தில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 9- ஆம் தேதி) வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தமிழக அரசியல் இடைத்தேர்தல் ரிசல்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அக்டோபர் 6ம் தேதி நடைபெற்ற தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்புதான் ஆட்சிக்கு வந்த விஜய்க்கு இது முதல் தேர்தல் சோதனையாகும். ஸ்டாலின், விஜய்யின் வேகத்திற்குத் தடை போட்டு பிரதான எதிராளியாக மாற முயன்று வரும் வேளையில், பழனிசாமி தனது கட்சி வென்ற இரண்டு இடங்களையும் மீண்டும் கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறார். இரண்டு இடங்கள் மட்டுமே என்றாலும், தமிழக அரசியலின் மூன்று முன்னணித் தலைவர்களின் பலத்தைச் சோதிக்கும் இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை உடனுக்குடன் இங்கே பார்க்கலாம்
Published On - Oct 09,2026 6:00 AM