அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை… டிஜிபி விளக்கம்!
PMK Leader Anbumani Padayatra : பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை என தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அந்தந்த காவல் ஆணையர், எஸ்.பி-க்கள் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து அனுமதி கொடுக்குமாறு டிஜிபி சுற்றறிக்கை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்புமணி
சென்னை, ஜூலை 26 : பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி (Anbumani Ramadoss Padayatra) நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை என தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அந்தந்த காவல் ஆணையர், எஸ்.பி-க்கள் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து அனுமதி கொடுக்குமாறு டிஜிபி சுற்றறிக்கை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பாமக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக பகிரப்பட்டு விட்டதாக டிஜிபி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, நானே கட்சியின் தலைவர் நிறுவனர் என ராமதாஸ் கூறி வருகின்றனர்.
அதோடு, அன்புமணி தனது பெயரை பயன்படுத்தவே கூடாது என ராமதாஸ் கூறியிருக்கிறார். அதோடு இல்லாமல், இருவரும் நிர்வாகிகளை நீக்குவது, நியமிப்பதுமாக இருந்து வருகின்றனர். இப்படியான சூழலில், உரிமை மீட்க.. தலைமுறை காக்க என்ற 100 நாள் நடைபயணத்தை அன்பமணி 2025 ஜூலை 25ஆம் தேதியான நேற்று திருப்போரூரில் தொடங்கி இருக்கிறார். முன்னதாக, இந்த நடைபயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் டிஜிபியிடம் மனு அளித்திருந்தார்.
Also Read : நடைபயணத்திற்கு தடை போட்ட டிஜிபி… நீதிமன்றத்தை நாடும் அன்புமணி!
அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை
அதாவது, அன்புமணியின் நடைபயணத்தால் வட மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக ராமதாஸ் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதோது, கட்சியின் நிறுவனர் என்ற முறையில் தனது ஒப்புலின்றி அன்புமணி கட்டி கொடி, நிர்வாகிகள் சந்திப்பு போன்றவற்றை மேற்கொள்வாகவும் கூறியிருந்தார்.
இந்தநிலையில், அன்புமணியின் நடைபயணத்திற்கு தமிழக காவல்துறை தடை விதித்ததாக தகவல்கள் வெளிவந்தன. மேலும், நடைபயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன.
Also Read: அன்புமணி நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு: டாக்டர் ராமதாஸ்!
வழக்கறிஞர் விளக்கம்
தடையில்லை!
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ‘தமிழக உரிமை மீட்பு பயணம்’ திட்டமிட்டபடி தொடரும்…மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் விளக்கம் pic.twitter.com/YAS8mKFWaY
— Balu Kaliyaperumal (@PMKAdvocateBalu) July 26, 2025
ஆனால் அதற்கு இப்போது டிஜிபி மறுத்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அன்புமணியின் நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக பகிரப்பட்டு விட்டதாக டிஜிபி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாமக வழக்கறிஞர் பாலு கூறுகையில், “அன்புமணி நடைபயணம் திட்டமிட்டபடி நடக்கும். மாவட்ட காவசல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” என கூறினார்.