Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu News Highlights: பாஜக மாநில துணைத்தலைவராக குஷ்பூ.. வெளியான அறிவிப்பு

Tamil Nadu Breaking news Today 30 July 2025, Updates: காங்கிரஸில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த குஷ்பூ மாநில துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 13 பேரும் மாநில துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

C Murugadoss
C Murugadoss | Updated On: 30 Jul 2025 19:11 PM
Share
Tamil Nadu News Highlights: பாஜக மாநில துணைத்தலைவராக குஷ்பூ.. வெளியான அறிவிப்பு
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 30, 2025 அன்று சில மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை உடனுக்கு உடன் வழங்குகிறோம். தமிழ் நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30, 2025 அன்று நடைபெறவிருக்கிறது.   மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை 30, 2025 அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவித்திருக்கிறார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை நேரடியாக எடுத்துரைக்கலாம்.  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனி புனித இஞ்ஞாசியார் சர்ச் உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரபலமான இந்த சர்ச்சின் சார்பாக தேர் திருவிழா ஜூலை 30, 2025 அன்று வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது. மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ஜூலை 30 வரை மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மண்டலத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறவுள்ளதால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது குறித்த அப்டேட்டுகளை இந்தப் பகுதியில் பார்க்கலாம். செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து புதிய குழாயை இணைக்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ள இருக்கும் காரணத்தால் சென்னையின் சில பகுதிகளில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1, 2025 வரை மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது அது குறித்து கூடுதல் விவரங்களை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்

மேலும் தமிழ்நாடு செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Jul 2025 07:00 PM (IST)

    பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 135 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் எனவும், இதனால் 1, 03, 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Jul 2025 06:40 PM (IST)

    குரூப் 1 தேர்வில் கட்-ஆப் மார்க் குறைந்ததால் மாற்றுத்திறனாளி தற்கொலை

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு பணிக்கான குரூப் 1 தேர்வில் கட்-ஆப் மார்க் குறைந்ததால் விரக்தியில் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளியான நடராஜன் என்ற நபர் ஏற்கனவே குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றி அரசு பணியாளாராக வேலைப் பார்த்து வந்தார்.

  • 30 Jul 2025 06:20 PM (IST)

    TVK Party: கொடியின் நிறத்திற்கு வழக்கு.. தவெக பதில் மனு

    தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சிகப்பு, மஞ்சள் நிறத்திலான கொடியை தவெக பயன்படுத்த தடை கோரி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் விஜய் அரசியலில் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது

  • 30 Jul 2025 06:00 PM (IST)

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக குஷ்பூ தேர்வு

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக குஷ்பூ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கட்சியில் இணைந்து இரண்டாண்டுகளுக்குப் பின் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து மொத்தம் 14 பேர் மாநில துணைத் தலைவர்களாக செயல்படுவார்கள் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

  • 30 Jul 2025 05:40 PM (IST)

    தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி.. விஜய்க்கு சீமான் வாழ்த்து

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கு வெற்றி பேரணியில் தமிழ்நாடு சென்ற செயலி தொடங்கப்பட்டது. இதனை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் திருப்புமுனையாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • 30 Jul 2025 05:20 PM (IST)

    கொடைக்கானலில் 500 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய தன்னார்வலர்கள்

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து இன்று ஒரே நாளில் மட்டும் 500 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வலர்கள் அகற்றியுள்ளனர். அங்கு ஏற்கனவே பிளாஸ்டிகள் பொருட்கள் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் அபராதமும் விதிக்கப்படுகிறது.

  • 30 Jul 2025 05:00 PM (IST)

    மெட்ரோ ரயில்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம்

    சென்னை மெட்ரோ ரயில்கள் உள்ளே மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் புகையிலை பொருட்களை பயன்படுத்தி எச்சில் துப்புவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 30 Jul 2025 04:39 PM (IST)

    6 ஆண்டுகளாக விசாரணைக்கு வரவில்லை.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

    ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடி பெற்று மோசடி செய்ததாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

  • 30 Jul 2025 04:20 PM (IST)

    வாடகை கார் ஓட்டுநர் கொலை.. 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்ட குற்றவாளி

    தஞ்சையில் கடந்த 2001 ஆம் ஆண்டு காரை வாடகைக்கு எடுத்த சிறிது நேரத்தில் ஓட்டுநரைக் கொலை செய்து காருடன் தப்பிய இலங்கையைச் சேர்ந்த நபர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்டார். நேற்று சென்னை விமான நிலையத்தில் வந்த அவர் குடியுரிமை சோதனையில் பிடிபட்டார்

  • 30 Jul 2025 04:00 PM (IST)

    பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை ஜெயலலிதா விலக்கியது வரலாற்றுப் பிழை – கடம்பூர் ராஜூ

    அதிமுக 1999ம் ஆண்டு நடந்த மத்திய ஆட்சியில் பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை ஜெயலலிதா விலக்கியது வரலாற்றுப் பிழை. அதனால் திமுக தொடர்ந்து 14 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது என முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

  • 30 Jul 2025 03:40 PM (IST)

    ஆணவ படுகொலை செய்யப்பட்ட ஐடி இளைஞர்.. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

    நெல்லை மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட ஐடி இளைஞர் கவினின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குற்றவாளியாக பெண்ணின் சகோதர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான பெற்றோர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

  • 30 Jul 2025 03:20 PM (IST)

    உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

    சிவகங்கை மாவட்டத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினரை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்திற்கு நடுவே இந்த நிகழ்வு நடைபெற்றது.

  • 30 Jul 2025 03:00 PM (IST)

    ரயில் நிலையத்தில் தனியாக அமர்ந்திருந்த பெண்ணிடம் நகைப் பறிப்பு – இளைஞர் கைது

    சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் இருக்கையில் தனியாக அமர்ந்திருந்த பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாபாஜி என்ற சௌந்தர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

  • 30 Jul 2025 02:40 PM (IST)

    TVK Vijay Live News: My TVK செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடப்பது எப்படி?

    `My TVK’ செயலி மூலம் ஒரு தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 5 பேரை உறுப்பினர்களாக சேர்க்கலாம் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. பொதுமக்களை தவெக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு எந்த ஒரு OTP-யும் கேட்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Jul 2025 02:05 PM (IST)

    ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

    வாணியம்பாடி அருகே குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்த இளம் பெண், ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நேர்ந்துள்ளது. திருச்சூரை சேர்ந்த ரோகிணி, தனது கணவர் ராஜேஷ் மற்றும் குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்த நிலையில் தவறி விழுந்து ரோகிணி உயிரிழந்தார்.

  • 30 Jul 2025 01:45 PM (IST)

    மீண்டும் தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி.. எப்போது தெரியுமா?

    ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து அங்கிருந்து மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நேரலையில் பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படிக்க

  • 30 Jul 2025 01:25 PM (IST)

    TVK Election Plan: மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு.. த.வெ.கவின் அரசியல் நகர்வு..

    மக்களுடன் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு என அண்ணா கூறியதை சரியாக செய்தாலே போதும். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு வெற்றி பேரணியில் தமிழ்நாடு. அண்ணா வழியில் செல்வோம். இனி மக்களுன் தான் வாழ்க்கை. அடுத்தது மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு என அடுத்தடுத்து நடக்க உள்ளது. நாம் இருக்கின்றோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • 30 Jul 2025 01:05 PM (IST)

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம்..

    சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் செயலியை அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். இந்த செயலிக்கு மை டி.வி.கே (MY TVK) என பெயரிடப்பட்டுள்ளது.

  • 30 Jul 2025 12:45 PM (IST)

    அஜித்குமார் இறந்த வேதனை எனக்கும் உள்ளது – நிகிதா பேட்டி..

    மடப்புரம் அஜித்குமார் வழக்கில், நிகிதா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், “என்ன நடந்தது என்று தெரியாமல் ஒருவரையே குற்றம் சாட்டி திசை திருப்ப பார்க்கிறார்கள். இறந்து போனது வேதனையான விஷயம்தான். அந்த வேதனை எங்களுக்கும் இருக்கிறது வேண்டுமென்று யாராவது இப்படி செய்வார்களா? காய்கறியும், மளிகை பொருட்கள், பெட்ரோல், ஒரு உணவகத்திற்கு சென்று சாப்பிட கூட முடியவில்லை. கல்லூரியிலும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • 30 Jul 2025 12:25 PM (IST)

    மீண்டும் தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி..

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன் அரியலூர் மற்றும் தூத்துகுடி மாவட்டத்திற்கு  வருகை தந்திருந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் 2025, ஆகஸ்ட் 26 ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பிரதமரின் தமிழக பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  • 30 Jul 2025 12:10 PM (IST)

    எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை – நிகிதா பரபரப்பு பேட்டி..

    சிபிஐ விசாரணைக்கு பின் பேசிய நிகிதா, “ சம்பவம் நடந்த நேரத்தில் நடந்ததை பற்றி அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். என்னைப் பற்றி தவறான தகவல்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை. வெளியே சென்று எந்த வேலையும் செய்ய முடியவில்லை” என பேசியுள்ளார்.

  • 30 Jul 2025 11:49 AM (IST)

    அஜித்குமார் மரணம் தொடர்பாக நிகிதா பரபரப்பு பேட்டி..

    ம்டப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணம் தொடர்பாக,  நகை திருட்டுப் போனதாக புகார் அளித்த நிகிதா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் பேசுகையில் ஒருவர் இறந்தது வேதனையான விஷயம் தான், அந்த வேதனை எங்களுக்கும் இருக்கிறது. எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

  • 30 Jul 2025 11:30 AM (IST)

    சிறப்பு பேருந்துகளில் 10,000 க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு..

    இந்த வார இறுதியில் சிறப்பு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள 2025, ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6,224 பயணிகளும், 2025, ஆகஸ்ட் 2 ஆம் தேதி சனிக்கிழமை 2,892 பயணிகளும் மற்றும் (ஆகஸ்ட் 3, 2025) ஞாயிறு 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 30 Jul 2025 11:10 AM (IST)

    சென்னை கோயம்பேட்டில் இருந்து 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

    வரும் 2025, ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதி, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 1ம் தேதி 55 பேருந்துகளும் 2ம் தேதி சனிக்கிழமை 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • 30 Jul 2025 10:50 AM (IST)

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 690 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

    ஆடி கிருத்திகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 2025, ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 340 பேருந்துகளும், ஆகஸ்ட் 2 ஆம் தேதி சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • 30 Jul 2025 10:30 AM (IST)

    1,090 சிறப்பு பேருந்துகள்.. எப்போது முதல்?

     ஆடி கிருத்திகை மற்றும் வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு (2025, ஆகஸ்ட் 1,2 மற்றும் 3 ஆம் தேதி) சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக 1,090 பேருந்துகள் இயக்கப்படும் என  அரசு விரைவு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Jul 2025 10:26 AM (IST)

    பொதுத்தேர்வு கால அட்டவணை

    2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை 2025 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  • 30 Jul 2025 09:53 AM (IST)

    Chennai Rains : சென்னையில் வெதர் நிலவரம்

    ஜூலை 31ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 29,30ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 30 Jul 2025 09:37 AM (IST)

    Weather Update Today : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த  சில நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும்  என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

  • 30 Jul 2025 09:12 AM (IST)

    Chennai Buses : பிரத்யேக பேருந்துகள் அறிவிப்பு

    மாநகர போக்குவரத்து கழக அறிவிப்பின்படி, மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் 50 பிரத்யேக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்தப் பேருந்துகள் காலையிலும் மாலையிலும் பீக் ஹவரில் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகவும், அங்கிருந்தும் இயக்கப்பட உள்ளது.

    Read More

  • 30 Jul 2025 08:53 AM (IST)

    போக்குவரத்து கழகம் சொன்ன குட் நியூஸ்

     பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பிரத்யேகமாக சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.  இது குறித்து முக்கிய அப்டேட்டை போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது

  • 30 Jul 2025 08:33 AM (IST)

    நீதி கிடைத்திட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

    தன்னுடைய பதிவில் ஸ்டாலின் மாடல் காவல்துறை ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் அறிந்து, Failure Model அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைத்திடவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடியா Failure மாடல் அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.

    Read More

  • 30 Jul 2025 08:11 AM (IST)

    Failure மாடல் ஆட்சி – ஈபிஎஸ் விமர்சனம்

    இது குறித்து பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,  ஸ்டாலின் தலைமையிலான Failure மாடல் ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறுகிறது , ஜாதி மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    ஈபிஎஸ் விமர்சனம்

  • 30 Jul 2025 07:48 AM (IST)

    Kavin kumar honor killing : கவின்குமார் ஆணவப் படுகொலை – ஈபிஎஸ் கண்டனம்

    திருநெல்வேலி கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,   தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

  • 30 Jul 2025 07:24 AM (IST)

    மும்முரமாக வேலை பார்க்கும் தவெக

    2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க தவெக மும்முரமாக வேலை செய்து வருகிறது. இதில் முக்கியமாக வருகின்ற 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. அதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

    Read More

  • 30 Jul 2025 07:07 AM (IST)

    TVK Meeting Live Updates : பனையூர் தலைமை அலுவலகத்தில் மீட்டிங்

    ஜூலை 30, 2025 தேதியான இன்று சென்னை பனையூர் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சில முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. குறிப்பாக நிர்வாகிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

  • 30 Jul 2025 07:04 AM (IST)

    Tamilaga vetri kazhagam Meeting Today : த.வெ.கவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    விஜயின், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று  நடைபெறுகிறது. இதில்  உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை அறிமுகம் செய்கிறார் தலைவர் விஜய். மேலும் இந்த செயலிக்கான பயிற்சியையும் நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது

Published On - Jul 30,2025 7:02 AM