உதம்பூரில் தொடரும் கனமழை.. டவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உதம்பூரில் இருக்கும் டவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் மேலே அமைந்திருக்கும் பாலம் வழியாக ஏராளமான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டவி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.