மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க.. முழு விவரம் இதோ!
Tamil Nadu MBBS BDS Admission 2025 : தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு 2025 ஜூன் 29ஆம் தேதியான இன்று நிறைவடைகிறது. ஏற்கனவே, 2025 ஜூன் 25ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், அதனை 2025 ஜூன் 29ஆம் தேதியை மருத்துவ மாணவர் சேர்க்கை குழு நீடித்து இருந்தது

சென்னை, ஜூன் 29 : தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு (Tamil Nadu MBBS BDS Admission) 2025 ஜூன் 29ஆம் தேதியான இன்று நிறைவடைகிறது. ஏற்கனவே, 2025 ஜூன் 25ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், அதனை 2025 ஜூன் 29ஆம் தேதியை மருத்துவ மாணவர் சேர்க்கை குழு நீடித்து இருந்தது. அதன்படி, இன்றுடன் (2025 ஜூன் 29) மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைகிறது. அண்மையில் நீட் இளநிலை தேர்வுக்கான முடிவகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
இதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,841 இடங்களும், இஎஸ்ஐ கல்லூரிகளில் 91 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1,823 இடங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 268 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிடிஎஸ் படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 197 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1,360 இடங்களுக்கு உள்ளன.
மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு 2025 ஜூன் 6ஆம் தேதி தொடங்கியது. இதனால், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்ப பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாடு மருத்துவ சேர்க்க குழு தகவலின்படி, இதுவரை 63,476 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 2025 ஜூன் 25ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அதனை 2025 ஜூன் 29ஆம் தேதி வரை நீடித்து மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இன்று (2025 ஜூன் 29) மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான https://tnmedicalselection.net/ அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்
- அங்கு Apply என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த கடவுச்சொல், மெயில் ஐடி, மொபைல் எண் போன்றவற்றை உள்ளீட வேண்டும்.
- பின்னர், உங்களுக்கான படிப்புகள், கல்லூரி விவரங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்
- அதன்பிறகு, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். யுபிஐ, நெட் பேக்கிங் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
- விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி பிறகு, Submit ஆப்ஷனை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகள், பழங்குடி, பட்டியலினத்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044 – 28361674 / 28363822 / 28364822 / 28365822 / 28366822 என்ற எண்களை மாணவர்கள் தொடர் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.