Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இன்று நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு… விதிமுறைகள் என்னென்ன?

TNPSC Group 1 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தேர்வு 2025 ஜூன் 15 அன்று 44 மையங்களில் நடைபெறுகிறது. 2.49 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டு உள்ளனர். சென்னையில் மட்டும் 41,094 பேர் 170 மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.

இன்று நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு… விதிமுறைகள் என்னென்ன?
இன்று நடக்கும் குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தேர்வு
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Jun 2025 07:41 AM

தமிழ்நாடு ஜூன் 15: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) நடத்தும் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வு (Group 1 Exam) 2025 ஜூன் 15  இன்று 44 மையங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 2.49 லட்சம் பேர் தேர்வெழுதினர். சென்னையில் (Chennai) மட்டும் 170 மையங்களில் 41,094 பேர் தேர்வெழுகின்றனர். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் அனுமதி சீட்டுடன் வர வேண்டும். 9 மணிக்கு பிறகு அனுமதி கிடையாது, மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அடையாள ஆவணங்களை கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் காலை 8:30க்குள் அனுமதி சீட்டுடன் வர வேண்டும் என்றும், மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது. அடையாள அட்டை கட்டாயம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகிறது – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உயர் நிலை அரசுப் பணிகளுக்கான குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலைப் பொதுத் தேர்வு இன்று (ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்காக 70 காலியிடங்கள் குரூப்-1 இல், மற்றும் 2 இடங்கள் குரூப்-1ஏ பிரிவில் நிரப்பப்பட உள்ளன.

சென்னையில் மட்டும் 170 மையங்களில் 41,094 பேர் தேர்வெழுத அனுமதி

இந்த தேர்வுக்காக மொத்தம் 2,49,296 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், குரூப்-1க்கு 2.27 லட்சம் பேர், குரூப்-1ஏக்கு 6,465 பேர், இரண்டிலும் கலந்துக்கொள்ள 14,849 பேர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்வு தமிழகத்தின் 38 மாவட்டங்களுடன், கூடுதலாக 6 தாலுகாக்களில் உள்ள மொத்தம் 44 மையங்களில் நடைபெறுகிறது. இதில் மட்டும் 987 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 170 மையங்களில் 41,094 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமான அறிவுறுத்தல்கள்:

  • தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்தை அனுமதி சீட்டுடன் அடைய வேண்டும்.
  • காலை 9.00 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் எந்த காரணத்திற்கும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • 12.30 மணி வரை தேர்வறையில் இருக்க வேண்டும். அதற்கு முன்னர் வெளியே செல்ல அனுமதிக்கப்படாது.
  • அடையாள ஆவணமாக ஆதார், பாஸ்போர்டு, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் அசல்/நகலைக் கொண்டு வர வேண்டும்.
  • செல்போன், மின்னணு கடிகாரம், புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனமும் கொண்டு வரக்கூடாது.
  • தேர்வர்களின் ஒழுங்கு மற்றும் நேர்த்திக்கான காரணமாக இந்தக் கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வாளர்கள் அவற்றை பின்பற்றி தேர்வில் கலந்துகொள்வது அவசியமாகும்.

ஹால் டிக்கெட் பெறுவது எப்படி?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழ்நாடு அரசுத் துறைகளில் வேலை பெறுவதற்கான முக்கியமான தேர்வுகளை நடத்தும் அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இது 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை நகரில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.

இந்த தேர்வாணையம் Group 1 முதல் Group 4 வரை உள்ள பல்வேறு பிரிவுகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதில் முதலமைச்சர் நிலை அதிகாரிகள், துணை கிளார்க்கள், கிராம உதவியாளர்கள் போன்ற பல பணியிடங்கள் அடங்கும். மேலும், தொழில்நுட்பத் துறைக்கான தேர்வுகள் (CTSE) மற்றும் துறைத்தேர்வுகள் (Departmental Exams) ஆகியவற்றையும் நடத்துகிறது.