சென்னை, பிப்ரவரி 23, 2026: “காப்பி–பேஸ்ட் அரசியல் என்பது காலங்காலமாக அதிமுகவின் வாடிக்கை என்பதை தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால் புதுசாக எதையாவது சொல்லுங்கள்” என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் வரவிருக்கும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு யுக்திகளை கையாள்கிறது. அதே நேரத்தில் அதிமுகவும் அரியணை ஏறுவதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசியலில் திமுக–அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மேலும் படிக்க: மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் – எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம்..
மகளிர் உரிமை தொகை – 5000 ரூபாய் வரவு:
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகையாக 1.31 கோடி குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 முன்பணமாக வரவு வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனால், இதற்கு அதிமுகவின் அழுத்தமே காரணம் என அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (X) வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுகவின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5,000 உரிமைத்தொகையை வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ளார்.
அழுத்தம் காரணம் அல்ல – சூழ்ச்சி தான் காரணம்:
திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது ‘பூமராங்’ ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்!
அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை… pic.twitter.com/sdWdeVKFZS
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 23, 2026
பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம். இதனைத் தெளிவாக விளக்கித்தான் என் சகோதரிகளின் கணக்கில் பணத்தை முன்பணமாக வரவு வைத்திருக்கிறேன்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்.. மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி?
பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதிலிருந்தே #DravidianModel சத்தமில்லாமல் நடத்திய ‘surgical strike’ உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய ‘hit’ அடித்துள்ளது என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
அதிமுக ஒரு Copy–paste’ அரசியல்:
‘Copy–paste’ அரசியல் என்பது காலங்காலமாக அதிமுகவின் வாடிக்கை என்பதை தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசாக ஏதாவது சொல்லுங்கள்!” என முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
