AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Maduranthakam and Dharapuram Bypoll Voting Live: 2 தொகுதிகள் இடைத்தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு!

Tamil Nadu ByPolls Voting Live Updates in Tamil: தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது. வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் பார்க்கலாம்.

C Murugadoss
C Murugadoss | Updated On: 06 Oct 2026 06:49 AM IST
Share
Maduranthakam and Dharapuram Bypoll Voting Live: 2 தொகுதிகள் இடைத்தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

LIVE NEWS & UPDATES

  • 06 Oct 2026 06:45 AM (IST)

    Tamil Nadu Bypoll: 5 முனைப்போட்டி.. மக்கள் ஆதரவு யாருக்கு?

    2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

  • 06 Oct 2026 06:25 AM (IST)

    Tamil Nadu ByElection 2026: மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு..

    தமிழகத்தில் காலியாக இருக்கும் 7 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு அரசியல் திருப்பங்கள் அரங்கேறியது. அதில் ஒன்றாக, அதிமுகவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்களை, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இதில் மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த இசக்கி சுப்பையா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அடங்குவர். அதன்படி தமிழகத்தில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாகின. எனினும், தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதன்படி இன்று அக்டோபர் 6ம் தேதி 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது

Published On - Oct 06,2026 6:00 AM

Follow Us