AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் – கழுத்தை அறுத்து கொன்ற கணவன்; தர்மபுரியில் அதிர்ச்சி

Dharmapuri murder: தர்மபுரி மாவட்டத்தில் மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை பூ மார்க்கெட் தொழிலாளி பாக்கியராஜ் குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு பாக்கியராஜ் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் – கழுத்தை அறுத்து கொன்ற கணவன்; தர்மபுரியில் அதிர்ச்சி
மனைவியை கொன்ற கணவன்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 06 Mar 2026 06:56 AM IST

தர்மபுரி மாவட்டம் ஜெல்திம்மனூரைச் சேர்ந்த தொழிலாளி பாக்கியராஜ், தனது மனைவி நிவேதிதாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த மோதலால் நிவேதிதா கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்ற நிலையில், உறவினர்கள் சமாதானம் செய்து கடந்த மாதம் மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும், 2026 மார்ச் 05 ஆம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரமடைந்த பாக்கியராஜ் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார்.

நடத்தையில் சந்தேகம் – குடும்ப தகராறு தீவிரம்

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஜெல்திம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (38). இவர் சென்னை பூ மார்க்கெட்டில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நிவேதிதா (28). இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பாக்கியராஜ் வேலைக்காக சென்னையில் வசித்து வந்ததால், அவ்வப்போது தனது சொந்த ஊரான ஜெல்திம்மனூருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து செல்வது வழக்கமாக இருந்தது. குடும்பம் அமைதியாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

Also Read: சிசிடிவியில் சிக்குவார்களா கொள்ளையர்கள்? வியாபாரிடம் 3 கிலோ தங்கம் வழிபறி

மனைவியின் நடத்தையில் சந்தேகம்

சுமார் 3 மாதங்களுக்கு முன்பு மனைவி நிவேதிதாவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக பாக்கியராஜ் கூறி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை காரணமாக நிவேதிதா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் கோணம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் நிவேதிதாவை கணவர் வீட்டிற்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

ஆத்திரத்தில் கொடூரம்

இந்த நிலையில் 2026 மார்ச் 5 ஆம் தேதி மீண்டும் கணவன்-மனைவி இடையே கடும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறின் போது ஆத்திரமடைந்த பாக்கியராஜ் அருகில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு மனைவி நிவேதிதாவின் கழுத்தை அறுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த நிவேதிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசில் சரணடைந்த கணவன்

மனைவியை கொலை செய்த பிறகு பாக்கியராஜ் நேரடியாக பஞ்சப்பள்ளி போலீஸ் நிலையத்தில் சென்று சரணடைந்தார். இதையடுத்து போலீசார் நிவேதிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறால் ஏற்பட்ட இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us