AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிறுவன் கடத்தல் வழக்கு.. பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Poovai Jagan Moorthy Case : சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக, பூவை ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு.. பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பூவை ஜெகன்மூர்த்தி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Jun 2025 15:34 PM IST

சென்னை, ஜூன் 30 : திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு (Poovai Jagan Moorthy Case) உச்ச நீதிமன்றம் (Supreme Court) முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படுவதாக கூறப்பட்டததை அடுத்து, ஜெகன் மூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு 2025 ஜூன் 30ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் வீட்டாருக்கு ஆதரவாக கும்பல் ஒன்று இளைஞரின் சகோதரரை கடத்தி, சிறுது நேரம் கழித்து விடுவித்துள்ளனர். இது தொடர்பாக, இளைஞரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், புரட்சி பாரம் கட்சி தலைவரும், கேவிகுப்பம் எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எனவே, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு பூவை ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது 2025 ஜூன் 15ஆம் தேதி விசாரணை நடந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆள் கடத்தல் வழக்கில் அரசு வாகனத்தை பயன்படுத்திற்காக ஏடிஜிபி ஜெயராம் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதி வேல்முருகன், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

பூஜை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன்

மேலும் அவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தும், இது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத்தின் வேறு நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இதனை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனை அடுத்து, பூஜை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய போலீசார் அவரை தீவிரமாக தேடினர். இந்த சூழலில், அவர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை அடுத்து, அவருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

 

Follow Us