வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்துக் கட்சிகளுடன் இன்று தேர்தல் அதிகாரி ஆலோசனை

EC All Pary meeting: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் திமுக கூட்டணி கட்சிகள் இவ்விவகாரத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்துக் கட்சிகளுடன் இன்று தேர்தல் அதிகாரி ஆலோசனை

கோப்புப் படம்

Updated On: 

29 Oct 2025 08:24 AM

 IST

சென்னை, அக்டோபர் 29: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR) தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே, கடந்த அக்டோபர் 24ஆம் தேதி திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை எதிர்க்க முடிவு செய்யப்பட்டது. அதோடு, இது தமிழ்நாட்டுக்கான பிரச்சனை. தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும் என்றும் கூறியிருந்தது.

ALSO READ: நெல்மணிகள் வீணாகி முளைத்தது போல… திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய் வெளியிட்ட அறிக்கை

தமிழகத்தில் நவ.4ல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடக்கம்:

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பீகாரில் முதல் கட்டமாக சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டா் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என கூறப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். பீகாரில் முறையீடு ஏதுமின்றி முதற்கட்ட சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றது. எனினும், அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் வாக்காளர் பட்டியலின் தரம் குறித்து கேள்வி எழுப்பின. தற்போதைய SIR சுதந்திரம் அடைந்த பிறகு 9ஆவது மேற்கொள்ளப்படும் மாற்றமாகும். கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னதாக 2002-2004-ல் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது.

இதனிடையே
, தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், சுமார் 70 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் கூறிய ஞானேஷ் குமார், தமிழகத்தில் வரும் நவ.4-ம் தேதி சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்க உள்ளதாகவும், இதற்காக 70,000 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நவ.3ம் தேதிக்குள் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிச.9-ம் தேதி வெளியிட திட்டமிடப் பட்டுள்ளாவும், பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.7-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SIR-க்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு: 

இதனிடையே, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அக்.27ம் தேதி அன்றே, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். இதில், வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை மறுக்கவில்லை என்றும் ஆனால், அதனை அவசர அவசரமாக செய்யக்கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும், நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இதனை எதிர்க்க முடிவு செய்யப்பட்டது.

ALSO READ: Tamilnadu CM MK Stalin: 2026 தேர்தலில் பாஜக கனவு பலிக்காது.. மாமல்லபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!

அதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில், அனைத்து கட்சிக் கூட்டம் நவம்பர் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், நடக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனிடையே, இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அதிமுக வரவேற்றது. இந்த சூழ்நிலையில், இன்று மாலை அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்துகிறார். இதில், அதிமுக, பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது.