Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் துயரம்.. பாதிக்கப்பட்டவர்களை ஒரு மாதத்திற்கு பிறகு சந்திக்கும் தவெக தலைவர் விஜய்!

Vijay Meet Affected People Of Karur Stampede | கரூரில் செப்டம்பர் 27, 2025 அன்று தவெக பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

கரூர் துயரம்.. பாதிக்கப்பட்டவர்களை ஒரு மாதத்திற்கு பிறகு சந்திக்கும் தவெக தலைவர் விஜய்!
தவெக தலைவர் விஜய்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Oct 2025 08:29 AM IST

சென்னை, அட்கோபர் 27 : கரூர் கூட்ட நெரிசலில் (Karur Stampede) சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக (TVK – Tamilaga Vetri Kazhagam) தலைவர் விஜய் ஆறுதல் கூற உள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலம் ஆகும் நிலையில், சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வைத்து விஜய் இன்று (அக்டோபர் 27, 2025) பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கும் விஜய்

செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விவகாரம் இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : நெல் மூட்டை விவகாரத்தில் இபிஎஸ் கூறியது புளூகு மூட்டை: முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானர்வர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், தமிழக அரசு சாபில் ரூ.10 லட்சமும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என அவர் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், ஒரு மாதம் கழித்து இன்று (அக்டோபர் 27, 2025) அவர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை சென்னையில் வைத்து சந்திக்கும் விஜய்

முன்னதாக கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தொடர்புக்கொண்டு வீடியோ கால் மூலம்  விஜய் ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து விரைவில் கரூர் மக்களை சந்திப்பேன் எனவும் அவர் உறுதி அளித்திருந்தார். அதன்படி, இன்று (அக்டோபர் 27, 2025) சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வைத்து அவர் பாதிகப்பட்டவர்களை சந்திக்க உள்ளார்.

இதையும் படிங்க : நாளை வெளியாகும் தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம்

பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கும் இந்த நிகழ்வு முற்றிலும் தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என கட்சி முடிவு செய்துள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு செய்தியாளர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.