ஆடிப்பெருக்கு.. திருச்சியில் பொதுமக்கள் நீராட ஷவர் அமைத்துக் கொடுத்த மாநகராட்சி!
Shower Arrangements For Aadi Perukku | ஆடிப்பெருக்கின் போது காவிரி ஆற்றில் பொதுமக்கள் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் நீராக ஷவர்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருச்சி, ஆகஸ்ட் 03 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று (ஆகஸ்ட் 03, 2026) ஆடிப்பெருக்கு கடைபிடிக்கப்படும் நிலையில், காவிரி ஆற்றில் (Cauvery River) மக்கள் புனித நீராட ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி ஆறு இந்த ஆண்டு வரண்ட நிலையில் காணப்படுவதன் காரணமாக மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், ஆடி பெருக்குக்கு திருச்சி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு
தமிழக்ரகளின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு உள்ளது. ஆடி மாதம் 18 ஆம் தேதி, காவிரி கரையோர மாவட்டங்களில் இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதிலும் குறிப்பாக காவிரி பாயும் திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா களைக்கட்டும். 2025 ஆம் ஆண்டு, அம்மா மண்டபத்தின் 12 படிக்கட்டுகளையும் தொடும் அளவுக்கு காவிரி நீர் வரத்து இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெகு சிறப்பாக நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.
இதையும் படிங்க : மதுரை சாலையோர வியாபாரியை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் – அப்படி என்ன செய்தார்?
ஆனால், இந்த ஆண்டு கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்படாததன் காரணமாக காவிரி ஆறு வரண்ட நிலையில் உள்ளது. நீர்மட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக சென்ற ஆண்டை போல இந்த ஆண்டு சிறப்பாக ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாத நிலையில், பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில் தான் திருச்சி மாநகராட்சி ஒரு அசத்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள் நீராட ஷவர் அமைத்துக் கொடுத்த மாநகராட்சி
அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீ குழாயில், பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பக்தர்களின் வசதிக்காக அம்மா மண்டபம் படித்துறையில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் சிக்கல்களின்றி குளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு – அமைச்சர் முக்கிய தகவல்
ஆடிப்பெருக்கின் போது ஏராளமான மக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதால், 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதுமட்டுமன்றி, கண்காணிப்பு கோபுரமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.