பொறுமை இழந்த கூட்டணி கட்சிகள்.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? திமுக வெளியிட்ட அறிவிப்பு..

Seat-sharing talks: வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினால் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது.

பொறுமை இழந்த கூட்டணி கட்சிகள்.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? திமுக வெளியிட்ட அறிவிப்பு..

கோப்புப் புகைப்படம்

Updated On: 

11 Feb 2026 08:21 AM

 IST

சென்னை, பிப்ரவரி 11: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 22-ம் தேதி முதல் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு, தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப் பணிகளில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக தங்கள் கூட்டணியை நிறைவு செய்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொடர்ந்து, தேமுதிக, ராமதாஸ் தரப்பு பாமக மட்டுமே தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளனர். அதேசமயம், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், தமிழகத்தில் கூட்டணி நிலைமை மாறுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

மேலும் படிக்க: தவெகவினர் மீது தாக்குதல்.. கர்ப்பிணி உட்பட 2 பேர் ஐசியூவில் சிகிச்சை.. விஜய் கடும் கண்டனம்!!

திமுக – காங்கிரஸ் இடையே விரிசல்:

குறிப்பாக, தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பு விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்து வந்தது. அதோடு, அதிகாரத்தில் பங்கு வேண்டும், அதிக தொகுதி வேண்டும் என்ற அழுத்தமும் கொடுத்து வந்தனர். இதனால், திமுக கூட்டணியில் பிளவு உண்டாகும் எனக் கூறப்பட்டது. எனினும், திமுக தரப்பில் அக்கட்சியின் எம்.பி கனிமொழி டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து இந்த சலசலபுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து, திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என இரு தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. எனினும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்படாதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

70 நாட்களாக காத்திருக்கிறோம்:

அந்தவகையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘கடந்த நவம்பர் மாதமே தமிழக காங்கிரஸ் கமிட்டிக்காக 5 பேர் கொண்ட ஒரு குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்தார். இதைத்தொடர்ந்து இக்குழு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல்வரைச் சந்தித்து பேசியது. இந்த சந்திப்பு நடந்து 70 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

திமுக வெளியிட்ட அறிவிப்பு:

இந்நிலையில், நேற்றிரவு திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது. இதற்காக, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், பகுதி-நகர-ஒன்றியக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள், சார்பு அணியினர், வாக்குச்சாவடி முகவர்கள் குழுவினர் என இலட்சக்கணக்கானோர், கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு:

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்க: படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன்.. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் பேசிய முதலமைச்சர்!

பிப்.22 முதல் பேச்சுவார்த்தை:

முதல்வர் ஸ்டாலினால் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாட்டரியில் ரூ.49 கோடி ஜாக்பாட்… நண்பருடன் பரிசுத் தொகையைப் பகிர முடிவு செய்த கர்நாடக இளைஞர்
வாரத்தின் முதல் நாளே கடுமையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
யூடியூபின் Auto-Dubbing.. இனி கூடுதல் சிறப்புடன் பயனர்களுக்கு வழங்கப்படும்..
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..