பருவமழை எதிரொலி – பள்ளிகள் செய்ய வேண்டியது என்ன? கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை
Safety Guidelines to Schools : அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடலில் காற்றத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் அது அக்டோபர் 22, 2025 அன்று தாழ்வு மையமாக உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அக்டோபர் 21, 2025 இன்று இரவு முதல் அக்டோபர் 22, 2025 காலை வரை விடிய விடிய கனமழை பெய்யும் என வெதர்மேன் பிரதீப் ஜான் (Pradeep John) எச்சரிக்கைவிடுத்துள்ளார். தீபாவளி விடுமுறை முடிந்து அக்டோபர் 22, 2025 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இன்னும் 2, 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பருவமழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறுவுறுத்தியுள்ளனர். அதுகுறித்து பார்க்கலாம்.
இதையும் படிக்க : 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…. இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை




- பள்ளி வளாகத்தில் கட்டடங்கள், கழிப்பறைகள், சுவர்களை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
- மாதந்தோறும் ஆய்வு செய்து செடி கொடிகள் வளர்வதை தடுக்க வேண்டும்.
- ஆசிரியர்கள் மாணவர்களிடையே வளாகத்தை பாரமரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவு நீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை மற்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்படுள்ளது. தீபாவளி விடுமுறைகள் முடிந்து அக்டோபர் 22, 2025 பள்ளி, கல்லூரிகள் துவங்கும் நிலையில், மழையை முன்னிட்டு விடுமுறை தொடருமான என்பது மாணவர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.
மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை
மழைகாலங்களில் செய்ய வேண்டியவை குறித்து மக்கள் செய்தித் தொடர்புத்துறை அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
- காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருகவும்.
- அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
- சூடான உணவுகளை மட்டுமே உண்ணவும்.
- சூப், ரசம்,பால், டீ,காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்தவும்.
- தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
- வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்.
- வீட்டில் மின்விளக்குகளை கவனமுடன் கையாளவும்.
- உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனே மாற்றவும்.
இதையும் படிக்க : தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..
சென்னையில் அக்டோபர் 21, 2025 இரவு முதல் அக்டோபர் 22, 2025 காலை வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் மழையை சமாளிக்க முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.