4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…. இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Heavy Rain Alert : தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அக்டோபர் 21, 2025 அன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 16, 2025 அன்று வடகிழக்கு பருவழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. இடி மின்னல்களால் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் 18, 2025 அன்று கடலூரில் இடி தாக்கி வயலில் வேலை பார்த்து வந்த 4 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து மழை காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை (Chennai), திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுத்துள்ளது. இதனையடுத்து அதிக கனமழை எச்சரிக்கை காரணமாக பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்ப்டடுள்ளது. தேவையில்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : மழை காலத்தில் தொடரும் மின் விபத்துகள் – தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மின்சார வாரியம் அறிவிப்பு




இது மட்டுமல்லாமல் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு புகார் எண் அறிவிப்பு
காஞ்சிபுரத மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களை 044-27237107 மற்றும் 80562 21077 எண்களில் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்திருக்கிறார். மேலும் மாவட்ட முழுவதும் மீட்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்களுடன் கனமழை தொடர்பாக காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்பாடும் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க : பொளக்கப்போகும் மழை.. எந்த மாவட்டங்களுக்கு அரஞ்சு அலர்ட்? சென்னையில் எப்படி இருக்கும்?
மேலும், விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு நெல் கொள்முதல் செய்யவும், மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாக்கவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.