Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னைக்கு இன்று விடிய விடிய கனமழை – பிரதீப் ஜான் எச்சரிக்கை

Heavy Rain Alert : சென்னையில் அக்டோபர் 21, 2025 இரவு மற்றும் அக்டோபர் 22, 2025 காலை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.இதனையடுத்து மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னைக்கு இன்று விடிய விடிய கனமழை – பிரதீப் ஜான் எச்சரிக்கை
பிரதீப் ஜான்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Oct 2025 21:05 PM IST

சென்னையில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அக்டோபர் 21, 2025 அன்று காற்றத்  தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா எச்சரித்திருக்கிறார். மேலும் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏறி அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதனையடுத்து குன்றத்தூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் அக்டோபர் 21, 2025 அன்று இரவு முதல் அக்டோபர் 22, 2025 வரை கனமழை பெய்யக் கூடும் என பிரதீப் ஜான் (Pradeep John) அறிவித்துள்ளார்.

சென்னைக்கு விடிய விடிய கனமழை

தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் அக்டோபர் 21, 2025 இரவு மற்றும் அக்டோபர் 22, 2025 காலை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2023 ஆம் ஆண்டு இவர் எச்சரிக்கைவிடுத்தபடி சென்னையில் விடிய விடிய மழை பெய்து பெரும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.  இதனால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும், மெழுகுவர்த்தி, பிரெட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதையும் படிக்க : பருவமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்.. ஆய்வு மேற்கொண்ட மின்சாரதுறை அமைச்சர் சிவசங்கர்..

பிரதீப் ஜான் எச்சரிக்கை

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.  பேரிடர் ஏற்பட்டால் மக்களை மீட்டு தங்க வைப்பதற்கான இடங்கள், அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கா இடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிக்க : அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்.. பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

தமிழகத்தில் அக்டோபர் 23, 24 ஆகிய நாட்கள் வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.