கனமழை எச்சரிக்கை – புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
School Leave : புதுச்சேரியில் கனமழை பெய்து வரும் நிலையில், அக்டோபர் 22, 2025 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் 21, 2025 அன்று இரவு முதல் சென்னையில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் (Pradeep John) அறிவித்துள்ளார். தமிழகத்தில் தீபாவளி விடுமுறை முடிந்து அக்டோபர் 22, 2025 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் கனமழை துவங்கும் என எச்சரிக்கவிடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கனமழை பெய்து வரும் நிலையில், அக்டோபர் 22, 2025 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அக்டோபர் 21, 2025 காலை முதலே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அக்டோபர் 22, 2025 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…. இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை




8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா,
தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 22, 2025 அன்று நாளை முழுமையான தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : பொளக்கப்போகும் மழை.. எந்த மாவட்டங்களுக்கு அரஞ்சு அலர்ட்? சென்னையில் எப்படி இருக்கும்?
மேலும் பேசிய அவர், “இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுததி தற்போது சென்னையிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக் கடலில் உள்ளது. அது தற்போது மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடலில் தற்போது பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம். ஏற்கனவே ஆழ்கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.