புதிய கட்சியை தொடங்கிய சசிகலா  – கட்சி கொடியும் வெளியீடு

விகே சசிகலா தலைமையில் கமுதியில் பிப்ரவரி 24, 2026 அன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.   இந்த பொதுக்கூட்டத்தில்  புதிய கட்சி தொடங்குவதாக அறிவத்த அவர் தன் கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

புதிய கட்சியை தொடங்கிய சசிகலா  - கட்சி கொடியும் வெளியீடு

புதிய கட்சியை தொடங்கிய சசிகலா

Updated On: 

26 Feb 2026 16:17 PM

 IST

சென்னை, பிப்ரவரி 14  : விகே சசிகலா தலைமையில் கமுதியில் பிப்ரவரி 24, 2026 அன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.   இந்த பொதுக்கூட்டத்தில்  புதிய கட்சி தொடங்குவதாக அறிவத்த அவர் தன் கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். கமுதியில் சசிகலா தன் ஆதரவாளர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது தன் புதிய கட்சியில் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் ஜெயலலிதா, ஆகியோர் வழியில் புதிய கட்சியை துவங்குகிறேன். என்று கூறி தன் கட்சிக் கொடியை அவர் அறிமுகம் செய்தார்.

புதிய கட்சியை அறிமுகப்படுத்திய சசிகலா

சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் ஜெயலலிதா, அண்ணா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று வணங்கிய சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 24, 2026 அன்று முக்கியமான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அறிவித்தார். அதன்படி கமுதியில் சசிகலா தன் ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசினார். பேரரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் புதிய கட்சி துவங்குகிறேன் என்றார். பின்னர் அவர் தனது கட்சிக் கொடியையும் அறிவித்தார்.

இதையும் படிக்க : தவெகவிற்கு ஆதரவளிக்கும் பன்ருட்டி ராமசந்திரனின் எம்.ஜி.ஆர் அதிமுக.. பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார் அறிவிப்பு..

கட்சி கொடியின் மேலே கருப்பு நிறமும், நடுவில் வெள்ளை நிறமும் அடியில் சிவப்பு நிறமும் இடம் பெற்றிருந்தது. நடுப்பகுதியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால் கட்சியின் பெயரை இன்னும் அவர் அறிவிக்கவில்லை. அது அதிமுகவுடன் தொடர்புடையதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சசிகலா வெளியிட்ட கட்சிக்கொடி

 

நிகழ்வில் பேசிய அவர், தமிழ்நாடு மக்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் புதிய களத்தை புதிய கட்சியை உருவாக்கவிருக்கிறோம். இது திராவிட கட்சியாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இந்த கட்சி செயல்படும். கட்சியின் கொடியை இங்கு அறிமுகம் செய்கிறேன். கொடியில் கருப்பு வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களுடன் அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா உருவங்கள் இடம் பெறும். கட்சியின் பெயரை விரிவில் அறிவிக்கிறேன். இது மாற்றுக்கருத்து இல்லை என்று பேசினார்.

இதையும் படிக்க : அதிமுக ஒரு Copy–paste’ அரசியல்.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டம்..

இந்த நிலையில் தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக பயணித்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்ற அவர் முதல்வராக பதவியேற்கவிருந்தார். இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற அவர் 4 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்தார். அதற்குள் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அதிமுகவை ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அவரது முயற்சி கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார்.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?