அன்புமணி நெஞ்சில் குத்துகிறார்…கண்ணீர் சிந்தி அழுத ராமதாஸ்!
Anbumani Stabbed Him In The Chest: அன்புமணி நெஞ்சில் குத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அப்போது, அவர் திடீரென கண்ணீர் சிந்தி அழுதார். கூட்டணி அறிவிப்பு எப்போது என்றும் தெரிவித்தார்.

பாமக பொதுக்குழுவில் கண்ணீர் சிந்திய ராமதாஸ்
சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று திங்கள்கிழமை ( டிசம்பர் 29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் பேசியதாவது: இந்த கூட்டங்களில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விரைவில் வன்னியர் சமுதாய மக்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை பெறுவோம். என்னையும், கட்சியின் கெளரவ தலைவர் ஜி. கே. மணியையும், அன்புமணி சில்லறை பசங்களை வைத்து காயப்படுத்துகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் எனது உறவினர்கள் தான். பாமகவின் செயற்குழு, பொதுக்குழு ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, 95 சதவீதம் பாட்டாளி மக்கள் என்னுடன் தான் உள்ளனர். அன்புமணியின் பின்னால் 5 சதவீதம் மக்கள் கூட இல்லை. பணத்தை தேவையின்றி செலவு செய்து தன் பின்னால் அதிக அளவு கூட்டம் உள்ளதாக அன்புமணி காட்டிக் கொள்கிறார்.
பாமகவின் கூட்டணி குறித்த அறிவிப்பு
இதற்கு, வருகிற சட்டமன்ற தேர்தலில் நல்ல முடிவை அளிப்பேன். இதற்காக, நல்ல கூட்டணியில் கூட்டணி வைப்பேன். பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. கட்சியின் முழு அதிகாரத்தை நிறுவன ராமதாசுக்கு அளித்துள்ளோம். எனவே, அவர் எப்போது கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று அனைவரது மனதிலும் கேள்வி எழும். கூட்டணிக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.
மேலும் படிக்க: விஜய்க்கு அவ்வளவு தைரியமா…தவெகவினருக்கு நாவடக்கம் தேவை…செல்லூர் ராஜூ ஆவேசம்!
இந்திய அளவில் அனைத்து பதவிகளையும்
நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் அனைத்து பதவிகளையும் அடைந்திருப்பேன். ஆனால், நான் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாகவே, அன்புமணி அமைச்சரானார். அன்பு மணியும் செய்கையால் தூக்க மாத்திரை சாப்பிட்டாலும் இரவில் தூக்கம் வராமல் போய் விடுகிறது. அந்த நேரத்தில், பாட்டாளி மக்களை நினைக்கும் போது, தூக்கம் வந்து விடுகிறது. நான் அறிவிக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும்.
பாமக கொடியை செளமியா அன்புமணி பயன்படுத்தக்கூடாது
பாமக கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்த கூடாது. ஒரு நாள் எனது கனவு எனது தாய் தோன்றினாள். அப்போது, என்னை கொலை செய்வதாக கூறும் நபருக்கு உனது பேரன் பதவி அளித்துள்ளான் என்று நான் கூறுகிறேன். அப்போது, எனது தாய், நீ அந்த அளவுக்கு உனது மகனை வளர்த்துள்ளாய் என்று கூறுகிறார்.
கண்ணீர் சிந்திய மருத்துவர் ராமதாஸ்
என்னை மார்பிலும், முதுகிலும் அன்புமணி ஈட்டியால் குத்துவது போல குத்துகிறார் என்று தெரிவித்தார். அப்போது, அவரை அறியாமல் ராமதாஸ் கண்ணீர் சிந்தினார். உடனிருந்த காந்திமதி மற்று கட்சியின் கெளவரத் தலைவர் ஜி.கே.மணி அவரை ஆசுவாசப்படுத்தினர்.
மேலும் படிக்க: பாமகவுக்கும்-அன்புமணிக்கும் சம்பந்தமில்லை…ஜி.கே.மணி ஆக்ரோஷம்!