Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாமகவுக்கும்-அன்புமணிக்கும் சம்பந்தமில்லை…ஜி.கே.மணி ஆக்ரோஷம்!

PMK Has No Connection With Anbumani: பாட்டாளி மக்கள் கட்சிக்கும், அன்பு மணி ராமதாஸுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று அந்தக் கட்சியின் கெளரவத் தலைவர் ஜி. கே. மணி தெரிவித்தார். மேலும், அன்புமணியை கடுமையாக சாடினார் .

பாமகவுக்கும்-அன்புமணிக்கும் சம்பந்தமில்லை…ஜி.கே.மணி ஆக்ரோஷம்!
அன்புமணிக்கும்-பாமகவுக்கு சம்பந்தமில்லை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 29 Dec 2025 13:44 PM IST

சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று திங்கள்கிழமை ( டிசம்பர் 29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் கௌரவத் தலைவர் ஜி. கே. மணி பேசியதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸால் வளர்த்து ஆளாக்கப்பட்டவர்கள் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு தற்போது அன்பு மணியுடன் கை கோர்த்துள்ளனர். தற்போது, அவர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். தங்களை வளர்த்து ஆளாக்கிய மருத்துவர் ச. ராமதாஸை விட்டு விட்டு வந்து விட்டோமே என்று எண்ணுகின்றனர். சதிகாரர்கள், சூழ்ச்சிக்காரர்களை நம்பி வந்து விட்டோமே, மீண்டும் எப்படி ராமதாசுடன் இணைவது என்று மனசாட்சியுடன் உணர்கின்றனர். மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்த அன்பு மணி கட்சியை அபகரிக்க முயற்சி செய்கிறார்.

ராமதாஸை கொலை செய்ய வேண்டும் என்று கூறியவருக்கு பதவி

தற்போது, நம்மை நம்பி ராமதாஸ் துணிந்து இறங்கியுள்ளார். ராமதாசை தலையணையால் அமுக்கி கொலை செய்ய வேண்டும். கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நபர்களுக்கு அன்பு மணி பதவி அளித்துள்ளார். இது, ராமதாசுக்கு, அன்புமணி செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். அன்பு மணியால் பாட்டாளி மக்கள் கட்சியை கைப்பற்றவோ, அபகரிக்கவோ முடியாது.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு:சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள்…அடுத்து என்ன!

அன்புமணியின் துரோகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது

மருத்துவர் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி, பாமக என்றால் மருத்துவர் ராமதாஸ் தான். அதை யாராலும் மாற்ற முடியாது. என்னைப் பொறுத்த வரை என்னுடைய வாழ்வும், பற்றும் மருத்துவர் ச. ராமதாஸுக்காக தான். அன்பு மணியின் துரோகம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இனி அந்த துரோகம் எடுபடாது. எனவே, அரசியலை ஓரங்கட்டி விட்டு ஏதாவது வேலை இருந்தால் அன்புமணி பார்க்கலாம்.

பாமகவுக்கும்-அன்புமணிக்கும் சம்பந்தமில்லை

பாட்டாளி மக்கள் கட்சிக்கும், அன்புமணிக்கும் சம்பந்தமில்லை. இந்த கட்சி ராமதாஸுக்கு தான் சொந்தமானது. 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை மருத்துவர் ச. ராமதாஸ் உருவாக்குவார். தமிழகத்தில், கிராம அளவில் மற்றும் வாக்குச் சாவடி அளவில் பாட்டாளி மக்கள் கட்சி அதிக அளவில் வாக்குகளை பெறும் அளவுக்கு உழைக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சூளுரை

அன்புமணியின் செயல்பாடுகளால் ராமதாஸ் மிகுந்த மன வேதனை அடைந்து தினந்தோறும் கண்ணீர் வடித்து வந்தார். ஆனால், தற்போது நான் துணிந்து நிற்பேன் என்று சூழுரைத்துள்ளார். இதற்காக நாம் அனைவரும் அவருக்கு உறு துணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: விஜய்க்கு அவ்வளவு தைரியமா…தவெகவினருக்கு நாவடக்கம் தேவை…செல்லூர் ராஜூ ஆவேசம்!