Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய்க்கு அவ்வளவு தைரியமா…தவெகவினருக்கு நாவடக்கம் தேவை…செல்லூர் ராஜூ ஆவேசம்!

Former AIADMK Minister Sellur Raju Criticizes Vijay : அதிமுக பற்றி பேசுவதற்கு விஜய்க்கு அவ்வளவு தைரியம் வந்து விட்டதா என்றும், அந்தக் கட்சியினருக்கு நாவடக்கம் தேவை என்றும் அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார் .

விஜய்க்கு அவ்வளவு தைரியமா…தவெகவினருக்கு நாவடக்கம் தேவை…செல்லூர் ராஜூ ஆவேசம்!
விஜய் மீது போர் தொடுத்த செல்லூர் ராஜூ
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 29 Dec 2025 13:05 PM IST

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியலுக்கு நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. விஜய்க்கு கூட்டம் கூடுவது போல, நடிகர் வடிவேலு, நடிகை நயன்தாரா பரப்புரைக்காக வந்தாலும் அதிக அளவு கூட்டம் கூட தான் செய்யும். ஊழலுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமலஹாசன், ஒரு எம். பி. சீட்டுக்காக திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். விஜய்க்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் உதவாது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். எடப்பாடி கே. பழனிசாமி தான் முதல்வராக வருவார். களத்தில் அதிமுக இருக்கிறதா, இல்லையா என்பதை மக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். யாராலையும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்களுக்கு நாவடக்கம் தேவையாகும்.

தவக தலைவர் விஜய்க்கு அவ்வளவு தைரியமா

கடையை விரித்த விஜய்க்கு வியாபாரம் ஆகாமல் உள்ளது. திமுக ஆட்சியில் தவறு செய்த அதிகாரிகள் அதிமுக ஆட்சியில் நிட்சயமாக சிறை செல்வார்கள். மலேசியாவில் பேசிய விஜய், சினிமாவில் நான் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று சூசகமாக கேள்வி எழுப்பி உள்ளார். இதனால், அவருக்கு தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதிமுக களத்தில் இல்லை என்று கூறுவதற்கு விஜய்க்கு எவ்வளவு தைரியம் உள்ளது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் ஒவ்வொருவரின் தலையில் ரூ.1.27 லட்சம் கடன்…தமிழிசை செளந்தரராஜன் கொந்தளிப்பு!

தேர்தல் வெற்றியை மையமாக வைத்து காய்நகர்த்தும் திமுக

திமுகவின் ஆட்சி முடிவடையும் நேரத்தில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே கொடுத்திருக்கலாம். அதுவும் அதிமுக சார்பில் முன்னெடுக்க போராட்டத்தின் காரணமாக அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதாலும், வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவுமே முன்பு தகுதி இல்லாத பெண்கள், தற்போது தகுதி பெற்று மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக விருப்ப மனு பெறும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

அதிமுக குறித்து விஜய்யின் பேச்சு

ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பேசிய விஜய், களத்தில் இல்லாத கட்சிகளை பற்றி பேசவோ, கவலைப்படவோ தேவையில்லை என்று கூறியிருந்தார். விஜயின் இந்த கருத்து அதிமுகவை மறைமுகமாக சாடியிருந்ததாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பெரிதளவில் எதிர் கருத்து தெரிவிக்காத நிலையில், தற்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தவெக தலைவர் விஜயை கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு:சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள்…அடுத்து என்ன!