Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ் தேசியத்தின் முதல் எதிரி திரைக்கவர்ச்சி…விஜய் மீது சீமான் மறைமுக அட்டாக்!

Seeman Speaks Ntk General Committee Meeting: திரைக் கவர்ச்சியே தமிழ் தேசிய வளர்ச்சியின் முதல் எதிரி என்று நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இதில், விஜயை மறைமுகமாக அட்டாக் செய்தார்.

தமிழ் தேசியத்தின் முதல் எதிரி திரைக்கவர்ச்சி…விஜய் மீது சீமான் மறைமுக அட்டாக்!
தமிழ் தேசியத்தின் முதல் எதிரி திரைக்கவர்ச்சி
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 27 Dec 2025 15:48 PM IST

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை ( டிசம்பர் 27) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே ஆகும். அடிமைப்பட்ட மக்களுக்கும், விடுதலைக்கும் இருக்கின்ற கடைசி கருவி ஆட்சி அதிகாரம் மட்டுமே. தமிழ் மொழியை பேசி, நம்மால் அதிகாரத்துக்கு வந்து, நம் அடையாளத்தையும், நம்மையை அழித்து கொண்டிருக்கும் வேலையை திராவிடர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். தனித்து களத்தில் நின்று தத்துவ நிலைப்பாட்டையும், கொள்கை கோட்பாட்டையும் எடுத்துக் கூறி என்னை வென்று காட்டினாள் அது வெற்றியாகும்.

தமிழ் தேசியத்தின் முதல் எதிரி திரைக் கவர்ச்சி

சில கட்சியினர் வெறி கூட்டம் வெறி கூட்டம் என்று சுற்றித் திரிகிறது. இந்த கட்சியின் மாநாட்டில் படிக்கும் கூட்டம் ஒரு பக்கமும், கையை கடிக்கும் கூட்டம் ஒரு பக்கமும் உள்ளது. மொழி, உணர்வு, சிந்தனை ஆகியவற்றுக்கு மேலாக திரைக்கவர்ச்சி வைக்கப்படுகிறது. சாதி, மதம், சாராயம், திரைக் கவர்ச்சி ஆகிய நான்கும் தமிழ் தேசிய எழுச்சியின் முதல் எதிரிகளாகும்.

மேலும் படிக்க: பாஜகவின் முகமூடியாக செயல்படும் சீமான்-விஜய்..சனாதனத்துக்கு ஆதரவானவர்கள்…தொல்.திருமாவளவன் தாக்கு!

நாதகவின் அரசியல் கோட்பாட்டை அறிய அரை நூற்றாண்டாகும்

இதை சாய்க்காமல் வேறு எதையும் சாதிக்க முடியாது. நாம் தமிழர் கட்சியின் அரசியல் மற்றும் அரசியல் கோட்பாட்டை அறிந்து கொள்வதற்கு எதிர்க் கட்சிகளுக்கு அரை நூற்றாண்டாகும். சில்லறையும், சினிமாவையும் வைத்து உயர்ந்த சித்தாந்தத்தை எப்படி வீழ்த்தி விட முடியும். தனித்து அரசியலில் களம் கண்டு அங்கீகாரத்தை பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சியாகும். இந்த அங்கீகாரத்தை அரியணை ஏறும் வகையில் கட்சியை மாற்றுவோம்.

ஏற்கெனவே 3- ஆம் உலகப் போர் நடைபெற்றுவிட்டது

தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனுக்கும், 22 நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே மூன்றாவது உலகப்போர் நடந்து முடிந்து விட்டது. இனிமேல் போர் நடைபெற்றால் அது நான்காவது உலகப் போராகதான் இருக்கும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் வழங்காமல் பொதுமக்கள் தாங்களாகவே வீடு, வாகனம், உள்ளிட்டவற்றை வாங்கும் வகையில் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும்.

அறிவாயுதம் மூலம் நாதகவினர் அரசியல் செய்வோம்

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தலைவரின் புகைப்படங்களை சட்டை பையில் வைத்துக் கொண்டு அரசியல் பழகவில்லை. கழுத்தில் சயனைடு குப்பியையும், இடுப்பில் துப்பாக்கித் தோட்டங்களையும் வைத்து தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் கட்சியை ஆரம்பித்தது போல, நாங்கள் அறிவாயுதம் மூலம் அரசியல் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: “அரசின் 4 திட்டங்களால் மக்களுக்கு மாதம் ரூ.4,000 மிச்சம்”.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!