Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு.. இன்றும், நாளையும் சிறப்பு முகாம்..

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 27, 28ம் தேதி (இன்று, நாளை) நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு.. இன்றும், நாளையும் சிறப்பு முகாம்..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Dec 2025 08:04 AM IST

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இன்றும், நாளையும் (டிசம்பர் 27, 28) சிறப்பு முகாம் நடக்கிறது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சீரமைக்க தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (Special Intensive revision) மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், பீகாரில் தொடங்கிய இந்த பணி, தற்போது 2வது கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வருகிறது. அதன்படி,தமிழகத்தில் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் மொத்தம் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதையும் படிக்க : எந்த பேச்சுவார்த்தையும் கூடாது.. அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பில் எச்சரிக்கை..

இடம்மாறி சென்ற 66 லட்சம் வாக்களர்கள்:

அதன்படி, தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 5.43 கோடியாக குறைந்துள்ளது. அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக மீண்டும் சேர்வதற்கு மற்றும் விடுபட்டவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்களாக மீண்டும் சேர ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 18ம் தேதி வரை படிவம்-6ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.

இதுவரை 1.83 லட்சம் படிவங்கள் மட்டுமே விநியோகம்:

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 1,83,111 படிவங்கள் பெயர் சேர்ப்பதற்காகவும் (படிவம் 6), பெயர் நீக்கத்திற்காக 1,800 (படிவம் 7) அளிக்கப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்கள் தவிர சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் சேர இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அளவு இருக்கும் நிலையில், இதுவரை இரண்டு லட்சத்திற்கும் குறைவான 6ம் எண் படிவங்கள்தான் வந்துள்ளன.

4 நாட்கள் சிறப்பு முகாம்:

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 27, 28ம் தேதி (இன்று, நாளை) மற்றும் ஜனவரி 3, 4 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க : பாமகவில் அடுத்த அதிரடி.. ஜி.கே மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி அறிக்கை..

புதிய வாக்காளர்கள் படிவம்-6, முன்மொழியப்பட்ட வாக்காளர் சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க படிவம்-7, முகவரி மாற்றம், வாக்காளர் விவரங்கள் திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம், மாற்றுத்திறனாளிகள் வடிவம்-8ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.