மதுரையில் தவெக மாநாடு.. முன்னேற்பாடுகள் தீவிரம்.. விஜய் பேசப்போவது என்ன?
TVK Madurai Conference : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரையிலேயே தங்கி இருந்து ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

மதுரை, ஆகஸ்ட் 17 : 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு (TVK Madurai Conference) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதி (நேற்று) ஆய்வு மேற்கொண்டார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் கட்சி தலைவர் விஜய் மாநாடு, பொதுக்குழு, செயற்குழு பல்வேறு கூட்டங்களை நடத்தி இருக்கிறார். மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால், கட்சியை பலப்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும், கட்சியில் இரண்டரை கோடி உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் திட்டமிட்டு வருகிறார்.
மதுரையில் தவெக மாநாடு
இதற்காக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரப்பத்தி பகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக 500 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பணிகளை தவெகவினர் செய்து வருகின்றனர். இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், ஏற்பாடு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.




Also Read : பாஜக கூட்டணியில் தவெக இணையுமா? பி.எல். சந்தோஷ் சொன்ன விஷயம்.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்!
ஏற்பாடுகள் தீவிரம்
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரையிலேய இருந்து மாநாடு பணிகளை மேற்கொண்டு வருகிறார். விஜய் மேடையில் இருந்து தொண்டர்களிடையே நடந்து செல்லும் வகையில், 1000 அடி நீளத்தில் தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு மேடையில் கொள்கை தலைவர்கள் படங்கள் மற்றும் லேசர் வழியில் தவெக தலைவர் விஜய் புகைப்படங்கள் இடம் பெற உள்ளது. மேலும், 4 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநாடு முழுவதும் 20 ஆயிரம் மின் விளக்குகளும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட உள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. அதோடு, நிர்வாகிகள், ரசிகர்கள் அமவரும் வகையில், மேடைக்கு முன்பு ஆயிரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல் இன்றி மாநாட்டிற்கு தொண்டர்கள் வந்து செல்வதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
Also Read : ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடத்தப்படும் த.வெ.கவின் இரண்டாவது மாநாடு? இன்று விஜய் அறிவிப்பு..
விஜய் பேசப்போவது என்ன?
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தவெகவின் மாநாடு பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. தவெக சார்பில் நடந்த மாநாடு, பொதுக்குழுவில் கூட்டங்களில் விஜய் மத்திய மற்றும் மாநில அரசை தாக்கி பேசி வருகிறார். ஆனால், இதுவரை கூட்டணி குறித்து வெளிப்படையாக எங்கு தெரிவிக்காமல் இருந்து வருகிறார். எனவே, 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் விஜய் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால், நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேச்சுவார் எனவும் கூறப்படுகிறது.