“வாட் ப்ரோ, இட்ஸ் வெறி ராங் ப்ரோ!” ஈரோட்டில் விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!!
Poster against tvk Vijay in Erode: "ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா?" இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? வாட் ப்ரோ இட்ஸ் வெறி ராங் ப்ரோ (what bro it's very wrong bro) போன்ற பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன.

விஜய்க்கு எதிரான போஸ்டர்
ஈரோடு, டிசம்பர் 18: தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், ஈரோட்டில் இன்று அவருக்கு எதிராக பல்வேறு கேள்விகள் எழுப்பி, நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, விஜய்யின் இந்த பொதுக்கூட்டத்திற்கான நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 6 மணிக்கெல்லாம் அப்பகுதி மக்கள் அலைகடலென திரண்டு குவிந்து வருகின்றனர். அங்கு காலை உணவு போன்ற எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குள் விஜய்யின் வருகைக்காக காத்திருந்து வருகின்றனர். இதனிடையே, சென்னையில் தனது இல்லத்தில் இருந்து காலை 8 மணிக்கு விஜய் புறப்பட்டுள்ளார். தொடர்ந்து, விமானம் மூலம் கோவை செல்லும் அவர், அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு செல்கிறார்.
இதையும் படிக்க : இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..
பொதுக்கூட்டத்திற்கு பலத்த கட்டுப்பாடு:
இதனிடையே, இந்த கூட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலும், முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வழிகளிலும் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நிற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கட்டுக்கடங்காத கூட்டம்:
ஆனால், காலையிலேயே பலர் கைக்குழந்தைகளுடன் மைதானத்திற்கு வந்தனர். அதேபோல், பல கர்ப்பிணி பெண்களும் அங்கு வந்தனர். இதையடுத்து, தவெக நிர்வாகிகளே அவர்களை மைதானத்திற்குள் அனுமதிக்காமல் திரும்பி அனுப்பி வைத்தனர். அதேபோல், அங்கு காலை உணவு, ஸ்நாக்ஸ் போன்ற எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குள் விஜய்யின் வருகைக்காக காத்திருந்து வருகின்றனர். இதனிடையே, கரூர் துயர சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க : 2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?
விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்:
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் நலம் விசாரிக்காததற்கு எதிராக சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. “ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா?” இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? வாட் ப்ரோ இட்ஸ் வெறி ராங் ப்ரோ (what bro it’s very wrong bro) போன்ற பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், விஜய் Present, absent என்றும் குறிப்பிட்டு, விஜய் கரூர் மக்களை சந்திப்பதில் இருந்து Absent என்றும், ஜனநாயகன் ஆடியோ லாஞ்சிற்காக மலேசியா செல்வது குறித்தும் அதிதல் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த தவெக தொண்டர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.