2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?
Jallikattu Safety Guidelines: தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட ஆட்சியரிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, டிசம்பர் 17: உழவர் திருநாளான பொங்கல் (Pongal) பண்டிகைக்கு இன்னும் சில நாட்களை உள்ளன. பொங்கல் என்றாலே சட்டென நினவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். மதுரையை பொறுத்தவரை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இதனை காண உலகம் முழுவதிலும் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்காக மாடுகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வருகின்றனர். இது தவிர பிற ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிகட்டுப் போட்டிகளுக்கு அரசு சார்பில் சில வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த 2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுக்காக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இந்த நிலையில் இந்த 2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
- பொங்கலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தக்கூடாது.
- விலங்குகள் வதை தடுப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகளை நடத்த வேண்டும்
- முன்னறிவிப்பு இல்லாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக்கூடாது.
- காளைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது.
- காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிக்க : தீபத்தூண் மேல்முறையீட்டு வழக்கு…உத்தரவை நிறைவேற்ற தனி நீதிபதி அவசரப்படுத்தியது ஏன்…உயர்நீதிமன்றம் கேள்வி!




பொதுவாக பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மட்டுமல்லாது எருது விடும் விழா, மஞ்சு விரட்டு, ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இவை பெரும்பாலும் விலங்களை மையமாக வைத்து நடத்தப்படுவதால் அவற்றை துன்புறுத்தப்படாமல் தடுப்பதற்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் போட்டி நடத்துபவர்கள் முன் கூட்டியே அந்தந்த மாவடங்களில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெருவது கட்டாயமக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இனி மாற்றுத்திறனாளிகளும் கார் ஓட்டலாம்…வந்தாச்சு புதிய கண்டுபிடிப்பு!
ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டம்
கடந்த 2016 ஆம் ஆண்டு பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இது பெரும் சர்ச்சையான நிலையில், தமிழகத்தில் மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி உத்தரவிட்டது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் கடுமையான கட்டு்பாடுகளுடன் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.