AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

CM MK Stalin - Edappadi Palaniswami: முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது சமூக வலைதள பக்கத்தில், பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Dec 2025 13:42 PM IST

சென்னை, டிசம்பர் 17, 2025: பச்சை துண்டு போட்டு கொண்டு பச்சை துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா என எடப்பாடி பழனிசாமியை நோக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படாததால் இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி வேறு பெயரை வைத்ததற்காக, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 12ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த மசோதாவை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மசோதாவின் படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற பெயர், விக்ஷித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் என மாற்றப்படுகிறது.

மேலும் படிக்க: வேலூர் தங்க கோயிலில் ஜனாதிபதி முர்மு வழிபாடு…பலத்த போலீஸ் பாதுகாப்பு!

பச்சை துரோகம் செய்யும் பழனிசாமி – முதல்வர் மு.க ஸ்டாலின் சாடல்:


இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது சமூக வலைதள பக்கத்தில், பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

மூன்று வேளான் சட்டம், சிஏஏ போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி? MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?

மேலும் படிக்க: ஜனவரி முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டசபை.. பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்!!

திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?

இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு?

வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்? இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!

Follow Us