தீபத்தூண் சர்ச்சை : திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி – விவரம் இதோ

PM Modi to Visit Thiruparankundram : பிரதமர் நரேந்திர மோடி வருகிற மார்ச் 1, 2026 அன்று மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வருகிறார். மேலும் அன்றைய தினம் அவர் திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்யவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தீபத்தூண் சர்ச்சை : திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி - விவரம் இதோ

திருப்பரங்குன்றம் வரும் பிரதமர் மோடி

Published: 

24 Feb 2026 19:00 PM

 IST

மதுரை, பிப்ரவரி 24 : பிரதமர் நரேந்திர மோடி வருகிற மார்ச் 1, 2026 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்பதற்காக மதுரை வருகிறார். அப்போது திருப்பரங்குன்றம் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்ய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடிக்கடி தமிழகம் வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழழம் வருகிறார்.

திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர்

இதற்காக வருகிற பிப்ரவரி 28, 2026 அன்று சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் கிண்டி ஆளுநர் மாளிகையில் பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து மார்ச் 1, 2026 அன்று புதுச்சேரி செல்லும் பிரதமரர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து நேராக திருப்பரங்குன்றம் செல்லும் அவர், கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார்.

இதையும் படிக்க : மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம்.. யாருக்கு என்ன பொறுப்பு? வெளியான அரசாணை..

கடந்த சில மாதங்களாக திருப்பரங்குன்றம் தொடர்பான பிரச்னை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என ராம ரவிக்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் மலையில் தர்காவும் இருப்பதால் தமிழக அரசு சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.

இதனால் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில் தீபம் ஏற்ற அனுமதிக்காத நிலையில் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க : நெருங்கும் தேர்தல்.. இன்று முக்கிய முடிவை அறிவிக்கும் சசிகலா.. திட்டம் என்ன?

தமிழ்நாட்டிற்கு வருகிற மார்ச், 2026 அன்று 3 முறை தமிழ்நாடு வரவிருக்கிறார். மதுரையைத் தொடர்ந்து வருகிற மார்ச் 6, 2026 அன்று வேலூருக்கு வரும் அவர், மார்ச் 11, 2026 அன்று திருச்சியிலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். ஒரே மாதத்தில் 3 முறை தமிழகம் வருவது பெரும் கவனம் பெற்று வருகிறது.

அப்பாவின் பெயர் கட்டாயமில்லை.. சிறுமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்காவில் 90 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு வலுக்கும் எதிர்ப்பு
கேமராவில் சிக்கிய அரிய வகை ஃபயர் டைகர் - அப்படி என்ன ஸ்பெஷல்?
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்