‘கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை’ ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் உத்தரவு!
O Panneerselvam : பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதவ்லர் ஓ.பன்னீர்செல்வம் விலகிய நிலையில், தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய உத்தவை பிறப்பித்துள்ளார். அதாவது, அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை மீறியும் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 03 : கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) கூறியுள்ளார். சமீபத்தில் பாஜக கூட்டணியில் (NDA Alliance) இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில், ஆதரவாளர்களுக்கு இதுபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். 2025 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்த நிலையில், ஆனால் அவரை பிரதமர் மோடி சந்திக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக கூறினார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, இரண்டு முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியது தமிழக அரசியல் புதிய கேள்விகளை எழுப்பி இருக்கிறது. மேலும், திமுகவில் சேர வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். எனவே, இது தொடர்பான சலசலப்புகள் தமிழக அரசியலில் இருந்து வருகிறது. இப்படியான சூழலில் தனது ஆதரவாளர்களுக்கு ஓ பன்னீர்செல்வன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசியல் கூட்டணி குறித்த கருத்துக்களை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




Also Read : நான் மெசேஜ் அனுப்பவில்லையா? ஆதாரத்தை காண்பித்த ஓபிஎஸ்.. நயினார் நாகேந்திரனுக்கு பதில்
ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் உத்தரவு
அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள்! pic.twitter.com/gJu9Hk3bJF
— O Panneerselvam (@OfficeOfOPS) August 3, 2025
இதுகுறித்த ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர் கொள்ளும் வகையில், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்தொட்டி எங்கு எடுத்துச் செல்லவும், தி.மு.க. ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கழக நிர்வாகிகள் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை மீறிச் செயல்படுபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read : ’நான் மானஸ்தன்’ அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
கூட்டணி குறித்த முடிவு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்ப தக்க நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.