புதுச்சேரியில் புத்தாண்டு மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா…தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!
Puducherry New Year Liquor Sales: புத்தாண்டையொட்டி, புதுச்சேரியில் மது விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு வரி வருவாய் கூடி உள்ளது. கடந்த 3 நாள்களில் புதுச்சேரியில் ரூ. 47 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
புதுச்சேரி என்றாலே முதலில் அனைவரது நியாபகத்துக்கு வருவது மதுபானம் தான். ஏனென்றால், புதுச்சேரியில் பல்வேறு விதமான வெளிநாட்டு மது பானங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மது பானங்களை அருந்துவதற்காக புதுச்சேரி மாநிலத்தின் அண்டை மாநிலமான தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், சாதாரண நாட்களில் கூட ஒரு நாளைக்கு ரூ.8 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் ஆகியவற்றில் இந்த விற்பனை தொகை அதிகரிக்கும். இந்த நிலையில், தொடர் விடுமுறை, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்திருந்தனர்.
ரூ.47 கோடிக்கு மது விற்பனை
இதனால், புதுச்சேரியில் வழக்கமான நாட்களை விட தற்போது மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள மதுபான விற்பனை கடைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்து காணப்பட்டனர். இதனால், புதுச்சேரியில் மது விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்தது. அதன்படி, கடந்த மூன்று நாட்களில் புதுச்சேரியில் ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்…மருத்துவர்களுக்கு ஷாக் கொடுத்த சுகாதாரத்துறை!




புதுச்சேரிக்க படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்
தமிழக பகுதிகளில் கிடைக்கும் மது பானங்களுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி மதுபானத்துக்கென்று தனி இடம் உள்ளது. இதனால், புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் புதுச்சேரி மது பானத்தை அருந்தாமல் செல்ல மாட்டார்கள். இதில், வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுப்பது வழக்கம்.
புத்தாண்டு கொண்டாடத்தில்
அதன்படி, பண்டிகை காலங்களில் புதுச்சேரியில் மது விற்பனை அதிகமாக நடைபெறும். தற்போது, புத்தாண்டு கொண்டாட்டம் அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படுவதால், புதுச்சேரியில் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், பிரெஞ்சு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் புதுச்சேரிக்கு வந்திருந்தனர்.
இரண்டு மடங்கு உயர்ந்த மது விற்பனை
இதனால், புத்தாண்டை மையமாக வைத்து கூடுதல் மதுவை விற்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி, புதுச்சேரியில் ரூ.47 கோடிக்கு மது விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது. இது கூடுதல் வருவாயாகவும் அமைந்துள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மது விற்பனை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க: இந்தூரில் மாசடைந்த குடிநீர்.. 1400க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. 4 பேர் உயிரிழப்பு.. என்ன நடக்கிறது?